இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரரான அமோல் முஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 2ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி
இம்மாத கடைசில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் …..
இதன்படி, இந்தியாவிற்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மாத்திரம் அமோல் முஜும்தாரை துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்க தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாப் டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் மோசமாக விளையாடியிருந்தது. இதனால் லீக் சுற்றுடனேயே பெருத்த ஏமாற்றத்துடன் அவ்வணி நாடு திரும்பியது.
உலகக் கிண்ணத் தோல்வியை அடுத்து தலைமை பயிற்சியாளர் கிப்சன் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ள அனைவரும் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டனர். அணியை மறுசீரமைப்பு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் சபை தீவிரமாக இறங்கியது.
இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு தென்னாபிரிக்கா அணி இந்தியாவுடன் முதலாவது கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இறுதியாக தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் தடுமாறியிருந்தனர்.
இளையோர் ஆசியக் கிண்ணத்தில் தோல்வி காணாத அணியாக இந்தியா
இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர் ஆசியக் ………
இந்த நிலையில், இம்முறை அந்த தவறை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்தியாவின் முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தார் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 44 வயதான இவர், 1994ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 171 முதல்தர போட்டிகளிலும், 113 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி 11,167 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், ரஞ்சி கிண்ண வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்.
மும்பை அணிக்காக பல வருடங்கள் விளையாடிய அவர் அவரது காலத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், இந்திய 19 மற்றும் வளர்ந்துவரும் அணியின் பயிற்சியாளரகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 அணித்தலைவராக கிரோன் பொல்லார்ட்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ………அத்துடன், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தனது இந்த புதிய நியமனம் குறித்து முஜும்தார் கூறியதாவது, ”கடந்த வாரம் என்னை தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்க அணுகினர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். இது எனது முதல் சர்வதேச பயிற்சியாளர் பதவியாகும். இதனை சிறப்பாக செய்து முடிக்க தற்போது தயாராகி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தியா – தென்னாபிரிக்கா தொடர்
டி20 தொடர்
- செப்டம்பர் 15 – முதல் டி20, தர்மசாலா
- செப்டம்பர் 18 – 2ஆவது டி20, மொஹாலி
- செப்டம்பர் 22 – 3ஆவது டி20, பெங்களூர்
டெஸ்ட் தொடர்
- ஒக்டோபர் 2-6 – முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்
- ஒக்டோபர் 10-14 – 2ஆவது டெஸ்ட், ராஞ்சி
- ஒக்டோபர் 19-23 – 3ஆவது டெஸ்ட், புணே
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<