பாகிஸ்தான் டி-20 அணியில் ஆமிர் நீக்கம்: அறிமுக வீரர் வக்காஸுக்கு வாய்ப்பு

318

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்து மொஹமட் ஆமிர் நீக்கப்பட்டு 30 வயதுடைய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் வக்காஸ் மக்சூத் முதற்தடவையாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அனுபவ வீரர்களான இமாத் வசீம் ஒரு வருடத்தின் பிறகும் பாபர் அசாம் 4 மாதங்களுக்குப் பிறகும் டி-20 அணிக்குள் இடம்பெற்றுள்ளனர்.

6 வருடங்களின் பின் சூதாட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பாக். வீரர்

தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தான்அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்று வருகின்றது. 2 டெஸ்ட், 3 டி-20 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், இரு அணிகள் மோதும் முதலாவது டி-20 போட்டி எதிர்வரும், 24ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் டி-20 குழாம் நேற்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது.    

அண்மையில் நிறைவுக்கு வந்த ஜிம்பாப்வே, அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடிய மொஹமட் ஆமிர், மொஹமட் நவாஸ் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு டி-20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக இடம்பிடித்த ஆமிர், இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் 3 போட்டிகளில் பங்குபற்றி எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக பந்துவீச்சில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்துவதில் பின்னடைவை சந்தித்து வருகின்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிருக்குப் பதிலாக அறிமுக வீரர் வக்காஸ் மக்சூத்தை பாகிஸ்தான் டி-20 குழாத்தில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

30 வயதான இடதுகை மித வேகப்பந்து வீச்சாளரான வக்காஸ் மக்சூத், அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்ததுடன், 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அதற்கு முன் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடிய மக்சூத், 8.8 என்ற ஓட்ட சராசரியுடன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

(courtesy – waqas twitter)

இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பாகிஸ்தான் கிண்ண உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்த வக்காஸ் மக்சூத், அதன்பிறகு நடைபெற்ற பாகிஸ்தானின் பிரதான உள்ளூர் முதல்தர ஒரு நாள் போட்டித் தொடரான குவைத்அசாம் தொடரில் 5 ஆட்டங்களில் பங்குபற்றி 14 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, ”அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் போட்டிகளில் வக்காஸ் மக்சூத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இதன்காரணமாக பாகிஸ்தான் மற்றும் டி-20 அணிகளில் அவரை இணைத்துக் கொண்டோம். அதேபால, நடப்பு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியினை நிரூபித்த இமாத் வசீமையும் டி-20 குழாத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம்” என பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.  

எனது தந்தையே எனது நாயகன்; முன்னாள் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்கும்..

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வந்த சகலதுறை வீரரான இமாத் வசீம், சுமார் ஒரு வருடத்தின் பிறகு பாகிஸ்தான் டி-20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அணிக்கெதிராக லாகூரில் நடைபெற்ற டி-20 போட்டியில் விளையாடியிருந்தார்.

எனினும், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இமாத், அதன்பிறகு தனது உடற்தகுதியினை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெறுவதில் தோல்வி கண்டார். இதனால், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிற்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதேநேரம், கடந்த மே மாதம் லோட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது பாபர் அசாமின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய அவர், அண்மையில் நிறைவுக்கு வந்த ஜிம்பாப்வே, அவுஸ்திரேலிய, பாக் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவருகின்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரிற்காக மீண்டும் அணிக்குள் இடம்பெற்ற பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைலுக்குப் பதிலாக டி-20 குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டி-20 குழாம்  

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), பக்கர் சமான், மொஹமட் ஹபீஸ், சஹிஷபா பர்ஹான், பாபர் அசாம், சொஹைப் மலிக், ஆசிப் அலி, ஹுசைன் தலாத், சதாப் கான், சஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான் ஷின்வாரி, ஹசன் அலி, இமாத் வசீம், வக்காஸ் மக்சூத் மற்றும் பஹீம் அஷ்ரப்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<