ஹொங்கொங்கில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இலங்கை, இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கலாக மூன்று பதக்கங்களுடன் போட்டி தொடரை நிறைவுசெய்துள்ளது.
ஆசிய இளையோர் மெய்வல்லுனரின் அடுத்த கட்டப் போட்டிகளுக்கு 4 இலங்கையர்கள் தெரிவு
மூன்றாவது தடவையாக இடம்பெற்றுவரும், இளையோர்…..
கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியின் நவிஷ்க சந்தீஷ், வெள்ளிப்பதக்கத்தை வென்று இலங்கைக்கான முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இந்த நிலையில், இறுதி தினமான நேற்று (17) இலங்கை மேலும் இரண்டு பதக்கங்களை வெற்றிக்கொண்டிருந்தது.
நேற்றைய தினம் சட்டவேலி ஓட்ட வீராங்கனையான அமேஷா ஹெட்டியாராச்சி பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்திருந்தார். அமேஷாவுக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்காத போதிலும், இரண்டாவது பாதி தூரத்தில் வேகத்தை அதிகரித்து மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். அமேஷா போட்டி தூரத்தை 01 நிமிடம் 01.42 செக்கன்களில் நிறைவு செய்தார். இதில் முதலிடத்தை தாய்லாந்தின் அரிசா வெறுவனரக் பிடித்ததுடன், இரண்டாவது இடத்தை தாய்பே வீராங்கனை ஜுய் சுவான் யங் பிடித்துக்கொண்டார்.
இதேவேளை இலங்கையின் மூன்றாவதும், இறுதியுமான பதக்கம் ஆண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டம் (Medley Relay) மூலமாக கிடைக்கப்பெற்றது. இந்த கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை சார்பில் ஹிருஷ ஹஷேன், ஷெமல் மிலந்த, இசுரு அபேயவர்தன மற்றும் 400 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற நவிஷ்க சந்தீஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை அணி இறுதி சுற்றை ஆரம்பிக்கும் போது 5வது இடத்தில் இருந்த போதும் நவிஷ்க சந்தீஷ் இறுதிக்கட்டத்தில் வேகத்தை அதிகரித்து இலங்கை அணி இரண்டாவது இடத்தை பிடிக்க காரணமானார்.
ஆசிய இளையோர் மெய்வல்லுனரின் அடுத்த கட்டப் போட்டிகளுக்கு 4 இலங்கையர்கள் தெரிவு
மூன்றாவது தடவையாக இடம்பெற்றுவரும், இளையோர்…..
இதேவேளை இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்டிருந்த சானிகா லக்ஷானி பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் துரதிஷ்டவசமாக 4வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டதுடன், உயரம் பாய்தல் வீராங்கனை நெத்மினி பல்லேகமவும் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். அதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் இறுதிப்போட்டியில் சந்தீப ஹெண்டர்சன் 5வது இடத்தை பிடித்ததுடன், ஷெமல் மிலந்த இறுதி இடத்தை பிடித்துக்கொண்டார்.
இம்முறை நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பில் 13 வீர, வீராங்கனைகள் பங்கேற்றதுடன், மூன்று பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<