விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் நிர்வாக சேவையில் விசேட தரத்தைக் கொண்ட அதிகாரியான அமல் எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (19) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
1993ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்துகொண்ட அமல் எதிரிசூரிய, 2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் நிர்வாக சேவையில் நுழைந்தார்.
இதில் மஹாவெலி அதிகார சபை, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மஹாவெலி பிரிவில் மேலதிக செயலளாராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னைய பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய தம்மிக முதுகல, தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையின் முன்னணி கபடி வீராங்கனை
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையான சப்ரகமுவ .
சுமார் 31 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட தம்மிக முதுகல, கடந்த 2 வருடங்களாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டு வந்தார்.
அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்த இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதிலும், குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் இருந்து அதிகளவான அதிகாரிகளை நேபாளத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க