141ஆவது முறையாக நடைபெறவிருக்கும் நீல நிறங்களின் சமர்

164

இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் பெரும்  போட்டியான (BIG MATCH) கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “நீல நிறங்களின் சமர் (Battle of Blues)”, இந்த ஆண்டு 141ஆவது முறையாக மார்ச் மாதம் 12ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. 

ஆஸியிடம் போராடி வீழ்ந்த இலங்கை மகளிர்

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு …….

இலங்கையின் கிரிக்கெட் பித்துக்காலத்தினை (March Madness), அலங்கரிக்கும் முக்கிய  பெரும் போட்டியாக உள்ள நீல நிறங்களின் சமர் 141 ஆண்டுகால வரலாற்றினை கொண்டிருப்பதோடு இந்த கிரிக்கெட் பெரும் போட்டியானது உலகில் இடம்பெறும் பழம்பெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது இடத்தினையும் பெற்றுக் கொள்கின்றது. 

உலகில் இடம்பெறும் மிகவும் பழைமையான கிரிக்கெட் போட்டியாக அவுஸ்திரேலியாவின் அடிலைட் நகரத்தினைச் சேர்ந்த சென். பீட்டர்ஸ்  மற்றும் பிரின்ஸ் அல்பிரட் கல்லூரிகள் இடையிலான மோதல் இருந்து வருவதோடு இந்த மோதல், நீல நிறங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டிக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

முதன் முறையாக 1880ஆம் ஆண்டில் ஆடப்பட்ட நீல நிறங்களின் சமரானது கொழும்பு காலி முகத்திடலிற்கு அண்மையில் நடைபெற்றிருந்தது. இந்த கிரிக்கெட் பெரும் போட்டி இடம்பெற்ற மைதானத்திலேயே தாஜ் சமூத்ரா ஹோட்டல் தற்போது அமைந்திருக்கின்றது. 

Photos – 141st Battle of the Blues – Press Conference

றோயல் – தோமியன் மோதல் என மற்றைய பெயர் கொண்டும் அழைக்கப்படும் நீல நிறங்களின் சமரில் பாடசாலை மாணவர்களாக விளையாடிய பலர் இலங்கையின் தேசிய தலைவர்களாக பின்னர் உருவாகியிருக்கின்றனர். இவர்களில், தோமியர் கல்லூரி மாணவர்களான இலங்கையின் முன்னாள் பிரதமர்களான மாண்புமிகு. டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோரும் றோயல் கல்லூரி மாணவர்களான மாண்புமிகு இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எச்.ஈ.ஜே.ஆர். ஜயவர்த்தன ஆகியோரும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ….

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் பெரும் போட்டியின் ஊடக சந்திப்பானது கடந்த வாரம் BMICH இல் இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஊடக நிகழ்வில், இந்த பெரும் போட்டிக்கு அனுசரணை வழங்கும் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் விளம்பரப்படுத்தல் பிரிவின் அதிகாரி திருமதி. அமாலி நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்த நிலையில், ஏனைய அனுசரணையாளர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்குபற்றியிருந்தனர். 

இதுவரை நடைபெற்ற நீல நிறங்களின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் றோயல் கல்லூரியும், புனித தோமியர் கல்லூரியும் தலா 35 தடவைகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 

தற்போது நில நீறங்களின் சமர் வெற்றிக் கிண்ணத்தினை 12 ஆண்டுகளின் பின்னர் சித்தார ஹப்புகின்ன தலைமையில் வென்ற கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணியானது தக்கவைத்திருக்க, 141ஆவது முறையாக இடம்பெறும் பெரும் போட்டியில் தோமியர் கல்லூரியின் தலைவராக வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் தெவின் ஈரியகம செயற்படவிருக்கின்றார். அதேநேரம், கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் றோயல் கல்லூரியினை அதிரடி துடுப்பாட்டவீரரான தெவிந்து சேனரட்ன வழிநடாத்தவிருக்கின்றார். 

இந்த பெரும் போட்டிக்கு 2015ஆம் ஆண்டில் இருந்து அனுசரணை வழங்கும் டயலொக் ஆசியாட்டா நிறுவனமானது, இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் பெறப்படும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் தலா 1,000 ரூபா வழங்குவதோடு, போட்டியில் கைப்பற்றப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபா வழங்கவிருக்கின்றது. இவ்வாறு வழங்கப்படும் பணம் கிரிக்கெட் விளையாட்டோடு சம்பந்தமான நல்ல காரியம் ஒன்றுக்காக உபயோகம் செய்யப்படவிருக்கின்றது. 

கடந்த ஆண்டில் நடைபெற்ற நீல நிறங்களின் சமரில், டயலொக் நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டோடு சம்பந்தமான நல்ல காரியத்துக்காக ரூபா. 1,166,000 பணத்தினை வழங்கியிருந்தது. இந்தப் பணத்தோடு சேர்த்து ஏனைய வருடங்களிலும் இவ்வாறு வழங்கப்பட்ட ரூபா. 5,143,000 பணம் மூலம் இதுவரையில் தேவையாக இருக்கும் பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றமை முக்கிய விடயமாகும். 

இந்த ஆண்டும் வழமைபோன்று இந்த நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியினை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒத்தவிதத்தில் ThePapare.com ஆனது நேரடியாக ஒளிபரப்பு செய்யவிருப்பதோடு, குறித்த போட்டியினை ThePapare.com மூலமும் Dialog Television சேவை மூலமும், MyTV சேவை மூலமும் கண்டுகளிக்க முடியுமாக இருக்கும்.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<