இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து

210

கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் தொடர்ந்து பாதித்து வருகின்றது. 

அந்தவகையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகில் பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தினையும் மறு அறிவித்தல் ஒன்று வரும் வரையில் இடை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது. 

கொரோனா காரணமாக MCC கிரிக்கெட் போட்டியும் இரத்து

கடந்த பருவகாலத்தில், இங்கிலாந்து கவுண்டி சம்பியன்களாக மாறிய எசெக்ஸ் (Essex) கழகம் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) விளையாடவிருந்த ….

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், இலங்கையின் பிரிவு A, B அணிகள் பங்குபெறுகின்ற ப்ரிமியர் லீக் முதல்தரக் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்திருந்தன. தற்போது இந்த தொடர்களே இலங்கை கிரிக்கெட் சபையினால் இடைநிறுத்தப்பட்ட தொடர்களாக மாறியிருக்கின்றன.  

இந்த கிரிக்கெட் தொடர்களோடு சேர்த்து இலங்கையின் 13, 19 வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த பாடசாலை அணிகள் பங்குபெறும் கிரிக்கெட் தொடர்களும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.   

அதேநேரம், கடந்த வாரம் இலங்கை – இங்கிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கையையும் ஆட்கொண்டுள்ள நிலையில், 28 பேர் வரை இலங்கையில் நோயாளிகளாக இனங் காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<