CPL தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த மேற்கிந்திய வீரர்

2031

மேற்கிந்திய தீவுகளில் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் T20 தொடரில் பங்கேற்க இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான பேபியன் ஆலன் (FABIAN ALLEN) விமானத்தை தவற விட்டதால் அந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். 

கடைசி நேரத்தில் இந்த குழப்பம் நடந்ததால் அவர் விளையாட இருந்த செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி மாற்று வீரரை தேர்வு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

CPL தொடரை இழக்கும் ஆப்கான் இளம் வீரர்கள்

இந்த வருடத்துக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் T20 தொடர் கொவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களை ஒன்று திரட்டி இரு வாரங்களுக்கு முன்பு இருந்தே தனிமைப்படுத்தும் பணி ஆரம்பமாகி உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து வீரர்களையும் ட்ரினிடாட் அண்ட் டோபாகோ நாட்டிற்கு அழைத்துச் செல்ல தனி விமானங்களை போட்டி ஏற்பாட்டாளர்கள் தயார் செய்து இருந்தனர்.

இந்த நிலையில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான பேபியன் ஆலன் ஜமைக்காவில் இருந்து பார்படோஸ் செல்ல இருந்த விமானத்தை தவறவிட்டார்.

அத்துடன், பார்படோசில் இருந்து ட்ரினிடாட் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விமானத்தையும் அவர் தவறவிட்டார். கொவிட்- 19 வைரஸ் காரணமாக ட்ரினிடாட் செல்ல விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேபியன் ஆலன் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இதன் காரணமாக அவருக்கு இந்த வருடம் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாட முடியாது. 

இதனிடையே, பேட்ரியாட்ஸ் அணியில் ஏற்கனவே பயிற்சியாளர் மற்றும் சிலர் பல்வேறு காரணங்களால் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் பேபியன் ஆலனுக்கும் வியையாட முடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

முன்னதாக தென்னாபிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன், ஆப்கானிஸ்தான் வீரர்களான கைஸ் அஹ்மட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், நூர் அஹ்மட் ஆகியோரும் வீசா, விமான சேவை கிடைக்காதது போன்ற காரணங்களால் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<