இலங்கை நீச்சல் வீரரான புனித பேதுரு கல்லூரி மாணவரான அகலங்க பீரிஸுக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழா நடைபெறும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மூன்று பாடங்களில் தோற்ற கல்வித்துறை அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.
ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார் தினூஷா
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், பாலெம்பேங்கிலும் நாளை (18) ஆரம்பமாகவுள்ள…
இந்நாட்டு விளையாட்டு வீரர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இருந்து தேசிய பரீட்சை ஒன்றில் தோற்றுவதற்கு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பமாக இது வரலாற்றில் இடம்பிடிப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நாளை (18) ஆரம்பமாகும் ஆசிய விளையாட்டு விழாவின் நீச்சல் போட்டிகள் வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் நீச்சல் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்கவிருக்கும் அகலங்க பீரிஸ் கடந்த புதன்கிழமை (15) இந்தோனோசியாவை நோக்கி புறப்பட்டார்.
இதன்படி அவர் இந்தோனேசியாவில் இருந்து க.பொ.த. உயர்தர பரீட்சையின் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்கியல் முதல் வினாப் பத்திரத்தில் தோற்றுகிறார்.
இந்த பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தோனேசியாவுக்கு செல்வதோடு இந்தோனேசியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இந்த அதிகாரிகள் இந்தோனேசியாவில் பரீட்சையை நடத்துகின்றனர்.
இந்த பரீட்சைகள் ரகசியமான முறையிலும் வெளிப்படை தன்மையை பாதுகாக்கும் வகையிலும் இந்நாட்டு நேரப்படி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.
13ஆவது கழகமாக கட்டார் கழகத்துடன் இணையும் சாமுவேல் எட்டோ
பார்சிலோனா மற்றும் இன்டர் மிலான் கழகங்களின் முன்னாள் வீரரான சாமுவேல் எட்டோ கட்டார்…
‘இதற்காக நான் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை ஈடுபடுத்தியுள்ளேன். இரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்வது, விடைத்தாள்களை எடுத்து வருவது அவர்களால் மேற்கொள்ளப்படும். பரீட்சை நடத்தப்படும் இலங்கை நேரத்திற்கு அங்கு பரீட்சை இடம்பெறும்’ என்று பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.
இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி (நாளை) பொது அறிவு, 20 ஆம் திகதி ஆங்கிலம், 21ஆம் திகதி கணக்கியல் ஆகிய மூன்று பாடங்களினதும் பகுதி ஒன்றுக்கான வினாப்பத்திரங்களுக்கு விடை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தை மாணவரான அகலங்க பீரிஸூக்கு வழங்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு புனித பேதுரு கல்லூரி மாணவனான அகலங்க பீரிஸ் சதாரண தர பரீட்சையில் 9 A சித்திகளை பெற்று வர்த்தகப் பிரிவில் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றுகிறார்.
‘O/L, A/L செய்ய வேண்டும் என்பதற்காக 10ஆம் வகுப்பிலேயே விளையாட்டை கைவிடுவது இலங்கையில் சாதாரணமாக நடப்பதால், எனது நண்பர்களும் அப்படித்தான் இருந்தார்கள். இவ்வாறு எனக்கு சந்தர்ப்பம் ஒன்று தந்தால் எனக்குப் பின் இவ்வாறு விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு இது வாய்ப்பாக அமையும் என்று நான் நினைக்கிறேன்’ என தனக்கு கல்வியையும் விளையாட்டையும் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது பற்றி அகலங்க பீரிஸ் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 12 மெய்வல்லுனர்கள் பங்கேற்பு
18 ஆவது ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும்…
50 மீற்றர் பேக்ஸ்ட்ரோக், 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் மற்றும் 50 மீற்றர் பட்டர்பிளை ஸ்ட்ரோக் ஆகிய நீச்சல் பிரிவுகளில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராகவும் அகலங்க பீரிஸ் உள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் அகலங்க பீரிஸ் இலங்கை சார்பில் பங்கேற்றார். இலங்கை அஞ்சல் நீச்சல் போட்டி குழாமிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்வியில் திறமையானவர்களை பாதுகாப்பதற்காக பரீட்சையை வெளிநாட்டில் நடத்த சந்தர்ப்பம் வழங்கியதானது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கொள்கை ரீதியாக அறிமுகம் செய்த ஒன்றாகும்.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு விழாவில் 28 விளையாட்டுகளுக்காக இலங்கையின் 177 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிகள் நாளை ஆரம்பித்து செப்டெம்பர் 2 ஆம் திகதி முடிவடையவுள்ளன.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க