இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரரான திலகரத்ன டில்ஷான், அவுஸ்திரேலியாவின் Casey-South Melbourne விளையாட்டுக் கழகத்துக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
விக்டோரியா மாநில கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோகபுரா கிரிக்கெட் தொடரில், டேன்டெனோங் (Dandenong) விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 44 வயதான திலகரத்ன டில்ஷான் களமிறங்கினார்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டேன்டெனோங் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை எடுத்தது.
பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட டில்ஷான், 10 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.
>> கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர T10 போட்டிகள் வழிவகுக்கும்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Casey-South Melbourne விளையாட்டுக் கழகம் மைக்கல் வெல்லஸ் மற்றும் திலகரத்ன டில்ஷானின் அரைச்சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் அசத்திய டில்ஷான் 42 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்தார். இதில் 5 பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து 2016இல் ஓய்வுபெற்ற டில்ஷான், இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட T20 தொடரில் விளையாடியிருந்தார்.
இதனிடையே, இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான சுராஜ் ரன்தீவ் டேன்டெனோங் கழகத்துக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> Video – USA கிரிக்கெட் அணியில் இணைவாரா Sehan Jeyasuriya?
அத்துடன், தற்போது குடும்பத்தாருடன் மெல்பேர்னில் வசித்து வருகின்ற டில்ஷான், அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாக இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே, இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான சுராஜ் ரன்தீவ் டேன்டெனோங் கழகத்துக்காக விளையாடியிருந்ததுடன், டில்ஷான் விளையாடிய Casey-South Melbourne விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளராக இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான திலான் சமரவீர செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<