கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரிவும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி அணியும், பெண்கள் பிரிவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தையும் வலல ஏ ரத்னாயக்க கல்லூரி அணியும் சுவீகரித்தன.
அகில இலங்கை வீதி ஓட்டத்தில் வவுனியாவின் நிசோபனுக்கு இரண்டாமிடம்
அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப் போட்டியில் மாகந்துர..
இவ்விரண்டு பாடசாலைகளும், கடந்த வார இறுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரிலும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இம்முறை பாடசாலைகள் அஞ்சலோட்டத்தில் கலவன் பாடசாலைகள் பிரிவிலும் வலல்ல ஏ ரத்னாயக்க கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை (20) முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டிகளில் நாடாளவிய ரீதியில் இருந்து சுமார் 6,000 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்காக நடைபெற்ற இம்முறை போட்டிகளில் 34 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 17 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 17 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆண்கள் பிரிவில் 82 புள்ளிகளைப் பெற்ற பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி அணி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 55 புள்ளிகளைப் பெற்ற வலல ஏ ரத்னாயக்க கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும், 45 புள்ளிகளைப் பெற்ற கொட்டாஞ்சேனை புனித பெனடிக் (ஆசிர்வாதப்பர்) கல்லூரி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
Photo Album – All Island Schools Relay Carnival 2019 – Day 03
அதேபோல, பெண்கள் பிரிவில் 125 புள்ளகிளைப் பெற்றுக்கொண்ட வலல்ல ஏ ரத்னாயக்க கல்லூரி அணி முதலிடத்தையும், கம்பஹா திருச்சிலுவை கல்லூரி (79 புள்ளிகள்) இரண்டவாது இடத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி (43 புள்ளிகள்) மூன்றாவது இடத்தையும் பெற்றன.
இதேநேரம், கலவன் பிரிவில் வலல ஏ ரத்னாயக்க கல்லூரி (180 புள்ளிகள்) முதலிடத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி (55 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம் (53 புள்ளிகள்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
வயதுப் பிரிவு சம்பியன்கள்
12 வயதுக்குட்பட்டவர்கள்
- ஆண்கள் – கல்கிஸ்ஸை விஞ்ஞானக் கல்லூரி
- பெண்கள் – மொறட்டுவை வெற்றிநாயகி கன்னியாஸ்திரிகள் மடம்
14 வயதுக்குட்பட்டவர்கள்
- ஆண்கள் – மாத்தறை ராஹுல கல்லூரி
- பெண்கள் – பன்னிப்பிட்டிய தர்மபலா வித்தியாலயம்
16 வயதுக்குட்பட்டவர்கள்
- ஆண்கள் – குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம்
- பெண்கள் – வலல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயம்
18 வயதுக்குட்பட்டவர்கள்
- ஆண்கள் – கொட்டாஞ்சேனை புனித பெனெடிக் (ஆசிர்வாதப்பர்) கல்லூரி
- பெண்கள் – வலல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயம்
20 வயதுக்குட்பட்டவர்கள்
- ஆண்கள் – பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி
- பெண்கள் – வலல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயம்;
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<