நியூசிலாந்து ரக்பி யூனியன் (ஆல் பிளக்ஸ்) – இலங்கை ரக்பி கால்பந்து யூனியன் அனுசரணையில் பயிற்றுனர் பயிற்சிப் பட்டறை

338
All Blacks – SLRFU

இலங்கை ரக்பி கால்பந்து யூனியன் (SLRFU) மற்றும் நியூசிலாந்து ரக்பி யூனியன் (ஆல் பிளக்ஸ்) இணைந்து நடாத்தும் இரண்டாம் தர உலக ரக்பி பயிற்றுனர் கற்கைநெறியும் ஜூனியர் பயிற்றுனர் பயிற்சி செயல்முறையும் எதிர் வரும் செப்டம்பர் 24ம் திகதியிலிருந்து 28ம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெற இருக்கிறது.

இலங்கை ரக்பி கால்பந்து யூனியன், உலக ரக்பி கொள்கை வடிவங்களுடன் செயல்படுவதற்காக, 2017இல் அனைத்து ரக்பி பயிற்றுனர்களும் உலக ரக்பியினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுனர் தகுதிகளைக் கொண்டிருப்பதோடு, இலங்கை ரக்பி கால்பந்து யூனியனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பயிற்சி மற்றும் கற்கைநெறி நிகழ்ச்சிநிரல், இரண்டு நியூசிலாந்து உலக ரக்பி பயிற்றுனர்களான ஜாரெட் துயரோ (Jared Tuoro) மற்றும் ஜெர்வி எவோக் (Jarvey Aoake) உடன், உலக ரக்பி அங்கீகாரம் பெற்ற இலங்கை பயிற்றுனர்களான, நிஹால் குணரத்ன, சனத் மார்ட்டிஸ் மற்றும் ஆனந்த கஸ்தூரியாராச்சி அகியோர்களினால் நடாத்தப்பட இருக்கிறது.

ஜாரெட் துயரோ (Jared Tuoro) :

நியூசிலாந்து ரக்பி யூனியனின் பிராந்திய பயிற்சியாளர் மற்றும் அபிவிருத்தி முகாமையாளராகத் தற்போது பணியாற்றி வருகிறார். பிராந்திய மற்றும் தேசிய பயிற்சியாளர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வது, பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்வது இவரது கடமைகளாகும். ரக்பி மேம்பாட்டு பணியில் 12 வருடங்கள் அனுபவமும், பயிற்சியாளர் பயிற்சி கல்வியில் அதிகளவான அக்கறையும், விளையாட்டு பயிற்சியளிப்பில் இளங்கலையும், 4ஆம் தர உலக ரக்பி பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்றவரும் ஆவார்.

ஜெர்வி எவோக் (Jarvey Aoake) :

இவர், ஹாவ்க்ஸ் பே ரக்பி யூனியனின் மேம்பாட்டு அதிகாரியாவார். ரக்பி அணியை சிறந்த முறையில் வழி நடத்துவது, நியூசிலாந்து ரக்பி யூனியனின் பாதுகாப்பு மற்றும் காய உபாதைகள் தடுப்புப் பயிற்சி, நியூசிலாந்து ரக்பி பயிற்சியாளர் பயிற்சி மேம்பாடு (உலக ரக்பி 2ஆம் தரம்) செய்தல் இவரது கடமைகளாகும். உலக ரக்பி பயிற்சியாளர்களின் பயிற்சியாளர் என்ற அங்கீகாரம் பெற்றவராவர். உள்ளூர் கழக போட்டிகளுக்காகாக ஜெர்வி எவோக் விளையாடும் அதே நேரம், அண்மையில் இடம் பெற்ற மிட்டர்10 உள்ளூர் போட்டிகளுக்காக ப்ரொப்பாக முதன் முறையாக களம் இறக்கப்பட்டார். விளையாட்டு மேலாண்மை இளங்கலையும், 3ஆம் நிலை அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரும் ஆவார்.

செப்டம்பர் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும் உலக ரக்பி 2ஆம் தரம் கற்கைநெறிக்காக 30 பயிற்சியாளர்கள் மற்றும் A (டிவிசன்) பிரிவுக்காக விளையாடும் கழகங்களிருந்தும், டிவிசன்-1, A பிரிவு பாடசாலைகளிருந்தும் தலா ஓரு பயிற்சியாளரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4 ஜூனியர் பயிற்சியாளர்,  பயிற்சியாளிக்கும் கற்கைநெறிகள் இரண்டும், செப். 27ம் திகதி காலை 8.30 முதல் 11.30 வரையும், பிற்பகல் 3.30 முதல் 7.30 வரையும், இரண்டு கற்கைநெறிகள் செப். 28ம் திகதி காலை 8.30 முதல் 11.30 வரையும், பிற்பகல் 3.30 முதல் 7.30 வரையும் கண்டியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் ரக்பி கழக ஜூனியர் பயிற்சியாளர்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் ஆர்வமுள்ளவர்களும், பயிற்சியாளரின் பயிற்சி நிகழ்ச்சி நிரலில் பங்கு பற்றுவதற்கு எதிர் வரும் செப். 19ம் திகதி 2016க்கு முன்பாக இலங்கை ரக்பி கால்பந்து யூனியனில் (SLRFU) பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.