இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அலிஸ் இஸ்லாம் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்ததன் காரணமாக அலிஸ் இஸ்லாம் இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரில் இணைக்கப்பட்டிருந்தார்.
ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள்
இளம் வீரராக 2019ம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தன்னுடைய முதல் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் அதன் பின்னர் அவருடைய பந்துவீச்சு பாணியில் கேள்வி எழுந்ததுடன், உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.
எனினும் தற்போது பந்துவீச்சு பாணியை சரிசெய்துக்கொண்டு போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளார். இதில் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
எவ்வாறாயினும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன்காரணமாக அவரால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<