ஆசிய கிண்ண கால்பந்திலும் ரசிகர்களின் மனதை வென்ற நாடோடி அலிரேசா

404
Image Courtesy - Clive Mason/Getty Images

கால்பந்து உலகில் பிரபல அணிகள் மற்றும் நட்சத்திர வீரர்களைக் கொண்ட நாடுகளாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறிப்பிடலாம். எனினும், ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய அணிகள் கால்பந்து உலகில் ஆசியாவின் நாமத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நாடுகளாக விளங்குகின்றன.

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் …..

இந்த நிலையில், ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் 17ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய கிண்ண கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருவதுடன், அதன் இறுதிப் போட்டி இன்று இரவு (01) ஜப்பான் மற்றும் கட்டார் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

24 அணிகள் பங்கேற்ற இம்முறை போட்டிகளில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியனான ஈரான், ஈராக், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய அணிகள் காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுக்களுடன் வெளியேறின.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நட்சத்திரமாகவும், சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட வீரராகவும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 27 வயதான கோல்காப்பாளர் அலிரேசா பெய்ரதன்வாண்ட் மீண்டும் மாறிவிட்டார்.

Image courtesy – AFP

அலிரேசா பெய்ரதன்வாண்ட் என்பவர் யார்? கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் ஈரான் அணியின் கோல்காப்பாளராக செயல்பட்ட அலிரேசாவின் பெயரை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றான போர்த்துக்கல் அணியுடனான உலகக் கிண்ண குழுநிலை ஆட்டத்தில் ஈரான் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

பி.எஸ்.ஜி. அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நெய்மரின் உபாதை

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மென்செஸ்டர்…

எனினும், குறித்த போட்டியின் 53ஆவது நிமிடத்தில் வீடியோ உதவி நடுவர் மூலம் போர்த்துக்கல் அணிக்கு பெனால்டி வழங்கப்பட கிறிஸ்டியானோ ரொனால்டோ அதனை உதைக்க தயாரானார். ஏற்கனவே கோல் பெற்றிருந்த ரொனால்டோ மேலும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்தபோதும் அவர் உதைத்த பந்தை அலிரேசா தடுத்து தனது அணியின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டதுடன், ஒரே இரவில் உலகம் பேசும் வீரராகவும் மாறினார்.

இதனையடுத்து அலிரேசாவின் பின்னணி என்ன?, கால்பந்து விளையாட்டுக்கு எவ்வாறு அறிமுகம் ஆனார் என்பது தொடர்பில் கால்பந்து ரசிகர்கள் பரவலாக தேடுவதற்கு ஆரம்பித்தனர்.

அலிரேசா பெய்ரதன்வாண்ட்டின் வாழ்க்கையின் ஆரம்பம் பல சோதனைகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஈரானின் லோரஸ்தான் மாகாணத்தின் லரபியாவில் 1993ஆம் அண்டு நாடோடி குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தனது மூத்த மகனுக்கு கால்பந்து சரிப்பட்டு வராது என்று நம்பிய அவரது தந்தை கால்பந்தை விட்டுவிட்டு உருப்படியாக வேலைக்குச் செல்லும்படி ஒரே நச்சரித்துக் கொண்டிருப்பார். குடும்ப பொருளாதார நிலை மற்றும் தொந்தரவால் கால்பந்தை விட்ட 12 வயதான அலிரேசா நல்ல வாழ்வை தேடி தலைநகர் டெஹ்ரானுக்கு புறப்பட்டு வந்தார்.

அலிரேசாவுக்கு தலைநகரில் வாழ்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. உண்பதற்குக் கூட வழியில்லாத நிலையில் பெரும்பாலான நேரங்களில் தெருவோரங்களிலும், தான் வேலை பார்க்கும் இடங்களிலுமேயே உறங்க வேண்டி ஏற்பட்டது. தொழில்முறை கால்பந்து வீரராக வரவேண்டும் என்ற கனவுடன் சுற்றித்திரிந்த அலிரேசா, ஆடைத்தொழிற்சாலை, கார் திருத்தும் இடம், வீதியை கூட்டுபவனாக பல இடங்களில் தொழில் செய்தான்.

நான் காலையில் கண்விளிக்கும் போது பாதையில் செல்கின்ற மக்கள் எனக்கு முன்னால் சில்லறை காசுகளை போட்டுவிட்டு சென்றதை கண்டேன். உண்மையில் என்னை ஒரு பிச்சைக்காரனாக அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். ஆனால் மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தப் பணத்தைக் கொடுத்து வயிறு நிறைய சாப்பிட்டேன் என அலிரேசா பெய்ரதன்வாண்ட் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒருநாள் பஸ்ஸில் பயணிக்கின்ற போது அலிரேசாவின் வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதலாவது கால்பந்து பயிற்சியாரை சந்தித்தார். அதன்பிறகு தான் கால்பந்து நட்சத்திரமாவதற்கான பயிற்சிகளை முன்னெடுத்தார்.

Image courtesy – AFP

என்றாலும், ஈரானிய கால்பந்து விளையாட்டில் படிப்படியாக முன்னேறிய அவர், 2014இல் அந்நாட்டு தேசிய அணியில் பயிற்சி முகாமில் இணைந்தார். அவர், 2015ஆம் ஆண்டு ஈரானின் முதல்நிலை கோல்காப்பளராக மாறினார். உண்மையில் அவருடைய திறமைகளை பார்க்கும்போது ரஷ்யாவின் நட்சத்திர வீரரான யசின் ஞாபகத்துக்கு வரும்.

குறித்த காலப்பகுதியில் 12 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காத அலிரேசா ஈரான் அணியை கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டிக்காக தகுதிபெறச் செய்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

சுப்பர் சன் அணி தகுதி இழக்கப்பட்டு, தரமிறக்கப்பட்டது

ரினௌன் விளையாட்டு கழகத்திற்கு எதிரான போட்டியில்….

இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குழு நிலைப் போட்டிகளில் ஈராக் அணியுடனான ஆட்டத்தில் 70 மீற்றர் தூரத்துக்கு அவர் வீசியிருந்த பந்து தற்போது அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. ஒருசிலர் அதை உலக சாதனை என்று தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஓமான் அணிக்கெதிராக வெற்றியைப் பதிவுசெய்த ஈரான், இம்முறை ஆசிய கிண்ண கால்பந்தில் காலிறுதியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது. அந்தப் போட்டியில் மீண்டும் தனது கால்பந்து திறமையை அலிரேசா பெய்ரதன்வாண்ட் புதுப்பித்திருந்தார்.

போட்டியின் முதலாவது நிமிடத்தில் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிட்டியது. உண்மையில் போட்டி ஆரம்பித்து ஒருசில செக்கன்கள் செல்வதற்கு முன் இவ்வாறு கோலைக் கொடுக்க நேரிட்டால் ஈரான் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. ஆனால், கோல் காப்பாளர் அலிரேசா பெய்ரதன்வாண்ட் ஒரு சாதாரண வீரர் அல்ல என்பதையும் இப்போட்டியில் நிரூபித்துக் காட்டினார்.

உண்மையில் இந்த கோலை அடிப்பதற்கு ஒருசில செக்கனுக்கு முன்னால் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி ஞாபகம் வந்தது என போட்டியின் பிறகு ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார்.

 கால்பந்து புகைப்படங்களைப் பார்வையிட

கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் ரொனால்டோவின் கோலை அதிஷ்டவசமாக தடுத்தேன் என்பதை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் யோசிக்க வைப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. ஆனால் பெனால்டி கோல்களை தடுப்பதென்பது இலகுவான விடயமல்ல எனவும், அதுதான் கோல் காப்பாளரின் முக்கிய பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு அலிரேசா பெய்ரதன்வாண்ட் போட்டியின் பிறகு தெரிவித்திருந்தாலும், குறித்த போட்டியில் ஓமான் அணித் தலைவரின் பெனால்டி உதையை அலிரேசா பெய்ரதன்வாண்ட் அபாரமாக தடுத்து மீண்டும் ஈரான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதியில் ஈரான் அணி 2-0 என வெற்றிபெற்று இம்முறை ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியினைப் பெற்றுக்கொண்டது.

26 வயதான அலிரேசா பெய்ரதன்வாண்ட், இதுவைரை கால்பந்து உலகில் நிகழ்த்திய சாதனைகள் அரிதாக இருந்தாலும், மிக விரைவில் ஐரோப்பிய லீக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார் என கால்பந்து விமர்சகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆசிய கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் 3 தடவைகள் சம்பியனாக மகுடம்சூடிய ஈரான் அணிக்கு இம்முறை போட்டிகளில் அரையிறுதியுடன் வெளியேற நேரிட்டாலும், அலிரேசா பெய்ரதன்வாண்ட் என்ற கோல் காப்பாளரின் திறமைகள் மிக விரைவில் ஈரான் கால்பந்து அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆசியாவில் இருந்து கால்பந்து உலகிற்கு நட்சத்திர வீரர்கள் உருவாவது என்பது அரிதான விடயமாக இருந்தாலும், கால்பந்து உலகில் தற்போது கோல்காப்பாளராக நட்சத்திரமொன்று உருவெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<