IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

1210
Kolkata Knight Riders

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வீரர் இவ்வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐ.பி.எல் தொடரில் களமிறங்க உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த வீரரின் பெயர் அலி கான். வேகப் பந்துவீச்சாளரான அலி கான், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஹெரி கேர்னிக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணிக்காக முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கேர்னி தோள்பட்டை காயத்தால் இம்முறை .பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக மொஹமட் ஹசன் அலி கான் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இதன்படி, .பி.எல் நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் காத்திருக்கிறது.

>> ரோயல் செலன்ஞர்ஸ் அணியுடன் இணைந்த இசுரு உதான

.பி.எல் நிர்வாகம் அலி கான் விளையாடுவதற்கு அனுமதி கொடுத்தால், .பி.எல் தொடரில் விளையாட உள்ள முதலாவது அமெரிக்க வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

அலி கான் அமெரிக்கா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர். அவர் குளோபல் கனடா T20 தொடரில் விளையாடிய போது மேற்கிந்திய தீவுகள் வீரரும், சென்னை அணியின் நட்சத்திரமுமான டுவைன் பிராவோவால் அடையாளம் காணப்பட்டு, கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றார்.

கடந்த சீசனில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய அலி கான் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். 2020 சீசனில் 8 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 7.43 ஆகும்.

>> கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு சென்னை அணியுடன் இணைந்த தீபக் சஹார்

அலி கான் 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசக் கூடியவர். அவர் சிறந்த யோர்க்கர் வீசுவதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்

T20 போட்டிகளில் யோர்க்கர் பந்துகள் வீசுவதன் மூலம் ஓட்ட விகிதத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

2016ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கரீபியன் லீக் தொடரில் குமார் சங்கக்காரவை முதல் பந்தில் வெளியேற்றி கவனம் பெற்ற அவர், கடந்த .பி.எல் சீசனில் தனது பெயரை ஏலத்தில் இடம்பெறச் செய்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

.பி.எல் தொடரில் பங்கேற்பது குறித்துப் பேட்டியளித்துள்ள அவர், “.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ள முதல் அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்கிறேன்” என்றார்

>> நான்காவது முறையாக CPL தொடரின் சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்

“கடந்த வருட ஏலத்தில் எனது பெயரை இடம்பெறச் செய்தேன். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த வருடம் அதிஷ்டம் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது என நினைக்கிறேன். .பி.எல் இல் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அது தற்போது நனவாகி உள்ளது” என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அலி கான், பிராவோ, பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் சம்பியன் பட்டம்  வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஒன்றாக விளையாடிய நிலையில், அவர்கள் அனைவரும் .பி.எல் தொடரில் பங்கேற்க தற்போது டுபாயை வந்தடைந்துள்ளனர்

இதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, செப்டம்பர் 23ஆம் திகதி தன் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

>> எல்.பி.எல். வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் வெளியீடு

இதுஇவ்வாறிருக்க, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் ரஸ்டி தீரான் தற்போது அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும், 2011ஆம் ஆண்டு டெக்கன் சார்ஜர்ஸ் அணியிலும் ரஸ்டி தீரான் இடம்பெற்றார்

அதன்பின் 2015ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்ற ரஸ்டி, 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<