400 போட்டிகளில் கள நடுவராகக் கடமையாற்றி அலீம் தார் சாதனை

269
PCB

உலக கிரிக்கெட்டில் முன்னணி நடுவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற பாகிஸ்தானின் அலீம் தார், 400 சர்வதேசப் போட்டிகளில் கள நடுவராகக் கடமையாற்றிய உலகின் முதல் நடுவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தான்ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும், இறுதியுமான டி-20 போட்டியில் கள நடுவராக பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் செயற்பட்டார்.

இதன்மூலம் அலீம் தார் சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் கள நடுவராக இருந்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

கொரோனாவினால் T20i உலகக் கிண்ண தகுதிச்சுற்று ஒத்திவைப்பு

நடுவராக தான் எட்டிய புதிய மைல்கல் தொடர்பில் அலீம் தார் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்

இந்த சாதனையை எனது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் சமர்பிக்கிறேன். அதேபோல, எனக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக கடந்த 2019இல் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஸ்டீவ் பக்னரின் சாதனையையும் அலீம் தார் முறியடித்திருந்தார்.

52 வயதான அலீம் தார் பாகிஸ்தான் அணி சார்பில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்.

Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

கடந்த 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நடுவராக அறிமுகமாகிய அவர், 2003 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றினார். இதுவே அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியாகும்.

இதுவரை 136 டெஸ்ட், 211 ஒருநாள் மற்றும் 53 டி-20 போட்டிகளில் அலீம் தார் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்

அத்துடன், ஐசிசி இன் எலைட் நடுவர் குழாத்தில் இடம்பெற்றுள்ள அவர், 2009 முதல் 2001 வரையான ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 தடவைகள் ஐசிசி இன் வருடத்தின் சிறந்த நடுவருக்கான விருதையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<