பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்துறையினை விருத்தி செய்யும் நோக்கில், தென்னாபிரிக்க சுற்றுத் தொடரின் போது அதன் Power Hitting பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான அல்பி மோர்கல் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
RCB தலைவராக பாப் டு பிளெசிஸ்; விளக்கமளிக்கும் RCB முகாமைத்துவம்
பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக கடந்த வாரம் தென்னாபிரிக்கரான அலன் டொனல்ட்டின் நியமனம் இடம்பெற்றதிலிருந்து பங்களாதேஷ் அணியில் பயிற்றுவிப்புக்காக இணையும், இரண்டாவது தென்னாபிரிக்க வீரராக அல்பி மோர்கல் மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்பி மோர்கலின் நியமனம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) செயற்பாடுகளுக்கு தலைமை அதிகாரியாக காணப்படும் ஜலால் யூனூஸ் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் அல்பி மோர்கலின் இணைப்பானது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் Power Hitting ஆற்றலை இன்னும் விருத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சன்சஜன், சாரங்கனின் அரைச்சதங்களுடன் மத்திய கல்லூரிக்கு வெற்றி
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக ஏற்கனவே அவுஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜேமி சிட்டோன்ஸ் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<