குளியாப்பிட்டி – வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை 16 வயதுக்குட்பட்ட கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற, நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயம் தேசிய மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
முதலாவது Thepapare சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்ற புனித ஜோசப் கல்லூரி
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியுடனான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விறுவிறுப்பான பெனால்டி ஷுட் அவுட் முறையில் 6-5 என வெற்றி…
தொடரின் இறுதிப் போட்டியில் பம்மான அல் கமர் மத்திய கல்லூரியை எதிர்கொண்டு விளையாடிய நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயம் பெனால்டி உதைகளின் மூலம் 2018ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
இலங்கையின் பல மாவட்டங்களிலும் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட 24 பாடசாலை அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தேசிய மட்ட போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதியிருந்தன. இதில் தங்களுடைய குழுக்களில் முதல் இரண்டு இடங்களையும் பிடித்திருந்த அணிகள் நொக்–அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன.
இதன்படி, யாழ். நாவாந்துறை, அனுராதபுரம் புனித ஜோசப்ஸ், புனித மரியாள் கல்லூரி, பதுளை அல் இல்மா, கந்தானை டி மெசனோட், கேகாலை நூரானியா, கொழும்பு புனித பேதுரு கல்லூரி மற்றும் திஹாரிய அல் அஸ்ஹர் கல்லூரி ஆகியன தமது குழுக்களில் முதல் இடங்களை பிடித்துக்கொண்டன.
அதேநேரம், குழுக்களின் இரண்டாவது இடத்தை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ், களுத்துறை முஸ்லிம் வித்தியாலயம், கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி, புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப்ஸ் கல்லூரி, அம்பலாங்கொடை தீரானந்த கல்லூரி, குளியாப்பிட்டி அல் கமர் மற்றும் அம்பாறை அல் மதீனா ஆகிய அணிகள் பிடித்துக்கொண்டன.
காலிறுதிக்கு முன்னைய சுற்று
நூரானியா கல்லூரி, தீரானந்த கல்லூரியை 2-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதுடன், களுத்துறை முஸ்லிம் வித்தியாலயம், அல் இல்மா கல்லூரியை 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் இடத்திற்கான…
அல் கமர் மற்றும் புனித மரியாள் கல்லூரிகள் முறையே அல் அஸ்ஹர் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளை 5-3 மற்றும் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தன.
அத்துடன், புனித பேதுரு கல்லூரி அணி, புனித பெனடிக் அணியை 5-1 என வீழ்த்தியதுடன், புனித ஜோசப் வாஸ் கல்லூரி, புனித ஜோசப்ஸ் கல்லூரியை 1-0 என வீழ்த்தியது. அத்துடன், அல் மதீனா கல்லூரி, யாழ். நாவாந்துறை கல்லூரியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், டி மெசனோட் கல்லூரியானது கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியை 6-5 என வீழ்த்தியிருந்தது.
காலிறுதிப் போட்டி முடிவுகள்
கொழும்பு புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், புனித பேதுரு கல்லூரி மொஹமட் இஷானின் ஹெட்ரிக் கோல்களின் உதவியுடன் 4-0 என வெற்றிபெற்றது. அதேநேரம், நடைபெற்ற மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் நூரானியா கல்லூரியை எதிர்கொண்ட அல் கமர் கல்லூரி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இலங்கை மகளிர் கால்பந்து அணியில் மலையக வீராங்கனை யுவராணி
பஹ்ரெய்ன் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் சிநேகபூர்வ கால்பந்து போட்டிகளில்…
மற்றுமொரு போட்டியில் அல் மதீனா கல்லூரியை எதிர்கொண்ட, டி மெசனோட் கல்லூரி இறுதி நிமிடம் வரை 1-0 என முன்னிலையைப் பெற்றிருந்த போதும், கடைசி நிமிடத்தில் விடப்பட்ட கோல் காப்பாளரின் தவறால் வெற்றியை தவறவிட்டது. அல் மதீனா கல்லூரி இறுதி நிமிடத்தில் கோலடித்து போட்டியை 1-1 என சமப்படுத்தியதுடன், பெனால்டி உதையில் 5-4 என போட்டியை வெற்றிக்கொண்டது.
இதேவேளை, மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியில் 5-4 என்ற பெனால்டி உதையின் மூலமாக வெற்றிபெற்ற, புனித மரியாள் கல்லூரி, அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் முழு நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை அடித்திருந்த நிலையில், பெனால்டி வாய்ப்பின் மூலம் மரியாள் கல்லூரி வெற்றிபெற்றது.
அரையிறுதிப் போட்டி முடிவுகள்
இதேவேளை, புனித பேதுரு கல்லூரி மற்றும் அல் மதீனா மகா வித்தியாலயத்திற்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி பெனால்டி உதைகளின் மூலமாக முடிவுக்கு வந்திருந்தது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலடிக்க தவறிய நிலையில், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், 5-4 என்ற கோல்கள் கணக்கில் அல் மதீனா மகா வித்தியாலயம், முதலாவதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரியை எதிர்கொண்டிருந்த, அல் கமர் மத்தியக் கல்லூரி 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
aaa
மூன்றாவது இடம்
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பலம் மிக்க புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித மரியாள் கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் முதற்பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்த போதும், இரண்டாவது பாதியில் புனித பேதுரு கல்லூரியின் டரேஷ் திஸ்ஸாராச்சி மற்றும் மொஹமட் இஷான் ஆகியோர் ஒவ்வொரு கோல்களை அடிக்க புனித பேதுரு கல்லூரி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.
சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி
இந்த தொடரின் நொக்–அவுட் சுற்றுக்கான இரண்டு போட்டிகளில் பெனால்டி வாய்ப்பின் மூலமாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற, அல் மதீனா மகா வித்தியாலயம் சம்பியன் கிண்ணத்தையும் பெனால்டி வாய்ப்பின் மூலமாக கைப்பற்றியது.
அல் கமர் மத்தியக் கல்லூரியுடனான இந்தப் போட்டியின் முழு நேரத்திலும் கோல்கள் பெறப்படாமல் இருக்க, பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில், தங்களுடைய 5 வாய்ப்புகளையும் அல் மதீனா மகா வித்தியாலயம் கோல்களாக மாற்றிய நிலையில், அல் கமர் மத்தியக் கல்லூரி ஒரு பெனால்டியை தவறவிட்டு, சம்பியன் கிண்ணத்தை கைநழுவ விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<