சவுதி அரேபிய கழகத்தில் இணைந்த நெய்மர்

398
BBC

பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கழகத்தை சேர்ந்த நெய்மர், சவுதி ப்ரோ லீக்கின் அல்-ஹிலால் கழகத்தில் செவ்வாய்க்கிழமை (15) இணைந்துள்ளார். 

31 வயதான பார்சிலோனா மற்றும் PSG அணிகளின் முன்னாள் வீரரான நெய்மாருக்கான ஒப்பந்தம், சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (77.6 மில்லியன் பவுண்ட்கள்) மற்றும் ஏனைய சலுகைகள் என புரிந்து கொள்ளப்படுகின்றது 

PSG கழகத்தின் புதிய முகாமையாளரான லூயிஸ் என்ரிக்கியூயின் திட்டங்களில் நெய்மருக்கு இடம் கிடைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் பார்சிலோனா அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நெய்மர், பின்னர் அல்ஹிலால் கழகத்தில் இணைந்துள்ளார்.   

இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த நெய்மர், நான் ஐரோப்பாவில் நிறைய சாதித்தேன். சிறந்த தருணங்களை அனுபவித்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு உலகளாவிய வீரராக இருக்க விரும்பினேன். புதிய இடங்களில் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டு என்னை பரீட்சிக்க விரும்பினேன்என்று கூறினார். 

கடந்த 2017 ஆம் ஆண்டில் 200 மில்லியன் பவுண்கள் என்ற உலக சாதனை தொகைக்கு PSG இல் சேர்ந்த இவர், லோரியண்டிற்கு எதிரான கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற லீக் 1 போட்டியில் PSG அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

பெரிய கட்டணங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊதியங்களுக்காக உயர்மட்ட வீரர்களுடன் கையெழுத்திடும்கலகிகோஸ்சகாப்தத்திலிருந்து விலகிச் செல்வதற்கான PSGயின் புதிய திட்டத்திற் ஏற்ப  (STRATEGY) அவரது வெளியேற்றம் பொருந்துகிறது, லியோனல் மெஸ்ஸியும் இந்த  திட்டத்திற்கு ஏற்ப PSG கழகத்தை விட்டு வெளியேறினார். 

நான் புதிய விளையாட்டு வரலாற்றை எழுத விரும்புகிறேன். சவுதி ப்ரோ லீக்கில் இந்த நேரத்தில் மிகப்பெரிய ஆற்றல் மற்றும் தரமான வீரர்கள் உள்ளனர்என்று நெய்மர் மேலும் கூறினார். 

நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் விளையாடிய பிரேசிலிய வீரர்களோடு கதைத்தேன். எனவே இது விரும்பிய இடம் என்று நான் நம்புகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

சவூதி அரேபியாவில் ஆண்டுக்கு 150 மில்லியன் யூரோக்கள் (129.2 மில்லியன் பவுண்கள்) அவருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது PSGயில் அவர் சம்பாதித்த தொகையை விட ஆறு மடங்கு, இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது. 

அல் ஹிலாலின் தலைவரான ஃபஹாத் பின் சாத் இந்த ஒப்பந்தம் குறித்து கூறுகையில் , நெய்மர்  உலகளாவிய ஜாம்பவான். அவரை எமது அணிக்கு வரவேற்பதில் எமக்கு மிக்க மகிழ்ச்சி என அறிவித்தார் 

PSG அணிக்கு 173 போட்டிகளில் விளையாடி, ஐந்து லீக் 1 கிண்ணங்கள்  உட்பட 13 கோப்பைகளை வெல்ல நெய்மர் உதவியுள்ளார்.   

உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் போன்ற ஒரு அற்புதமான வீரரிடம் விடைபெறுவது எப்போதும் கடினம்என்று PSGயின் தலைமை நிர்வாகியான நாசர் அல்கெலாஃபி கூறினார். 

அவர் PSGக்கு வந்த நாளையும், கடந்த ஆறு ஆண்டுகளில் எங்கள் அணிக்கும் எங்கள் திட்டத்திற்கும் அவர் பங்களித்ததையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” என மேலும் அவர் கூறினார் 

நெய்மரின் இந்த மாற்றம், சவுதி கழகங்களால் மிகப்பெரும் பணம் செலவழித்து வீரர் பரிமாற்றங்களுக்கு மேலும் ஒரு எடுத்து காட்டாக அமைகிறது 

ஏற்கனவே இந்த பருவகாலத்தில் கரீம் பெனிஸிமா, என்கோலோ கன்டே, ஜோர்டன் ஹென்டர்சன், ரூபன் நெவ்ஸ், சடியோ மானே மற்றும் ரோபர்டோ பேர்மினோ ஆகிய முன்னணி வீரர்கள் சவுதி அரேபியாவுக்கு அணிகளை மாறி  சென்றுள்ளனர். 

போர்த்துக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த  ஜனவரி மாதம் மன்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து அல்நாஸ்ரில் சேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

                                  >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<