பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இந்தியர்

355

பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இந்தியாவில் பிறந்தவரான அஜாஸ் பட்டேல் முதல்  தடவையாக இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட முழுமையான தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும்இ இந்த டெஸ்ட் போட்டித் தொடருக்கான அணியை நியூசிலாந்து டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட குழாம் நேற்றுமுன்தினம் (24) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து டெஸ்ட் குழாமில் மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான அஜாஸ் பட்டேல் முதல் தடவையாக அவ்வணிக்காக அழைக்கப்பட்டுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் நியூசிலாந்து உள்ளுர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகின்ற வீரராக இடம்பெற்றுள்ளார்.

அதிலும் குறிப்பாக, சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற அஜாஸ் பட்டேல்,  கடந்த பருவகாலத்தில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்இ கடந்த பருவத்தில் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார்.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவராக கெளசால் சில்வா

நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார். எனவே அவருக்குப் பதிலாக நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள அஜாஸ் பட்டேல் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

Central Stag’s Ajaz Patel in the Plunket Shield cricket match, Central Stags v Northern Districts, Nelson Park, Napier, Wednesday, April 04, 2018. Copyright photo: Kerry Marshall / www.photosport.nz

இந்நிலையில், அஜாஸ் பட்டேலை டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் நியூசிலாந்து தேர்வுக்குழு உறுப்பினர் கெவின் லார்சன் கருத்து வெளியிடுகையில்,

கடந்த பருவத்தில் உள்ளுர் போட்டிகளில் அஜாஸ் பட்டேல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாகவே அவரை நாம் அணியில் இணைத்துக் கொண்டோம். அதிலும் குறிப்பாக, மிட்செல் சான்ட்னெர் இன்னும் பூரண குணமடையவில்லை. எனவே ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிடைக்கவுள்ள சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கருத்திற்கொண்டு அஜாஸுடன், டொட் ஆஸ்டல் மற்றும், இஷ் சோதியையும் அணிக்குள் இணைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி,  அண்மைக்காலமாக நியூசிலாந்து சார்பாக அனைத்துவகைப் போட்டிகளிலும் விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளரான டிரென்ட் போல்ட்டுக்கு பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள டி-20 தொடரில ஓய்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு நியூசிலாந்து ஓரு நாள் மற்றும் டி-20 அணிகளில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம்,  பாகிஸ்தான் A அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள சுற்றுப்பயணத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கும் நியூசிலாந்து குழாமில் வாய்ப்பு வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் அணி விவரம்:

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொட் ஆஸ்டல், டொம் பிளெண்டல், டிரென்ட் போல்ட், கொலின் டே கிராண்ட்ஹோம்,  மெட் ஹென்றி, டொம் லேதம், ஹென்றி, நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ஜீத் ராவல், இஷ் சோதி, டிம் சௌதீ, ரொஸ் டெய்லர்,  நீல் வோக்னர், பி.ஜே. வொட்லிங்.

ஒரு நாள் அணி விபரம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொட் ஆஸ்டல்,  டொம் பிளெண்டல், டிரென்ட் போல்ட், கொலின் டே கிராண்ட்ஹோம்,  மார்டின் கப்டில், மெட் ஹென்றி, டொம் லேதம், கொலின் முன்றோ,  ஹென்றி, நிக்கோல்ஸ், இஷ் சோதி, டிம் சௌதீ, ரொஸ் டெய்லர், பி.ஜே. வொட்லிங்.

டி-20 அணி விபரம்

கேன் வில்லியம்சன் (தலைவர்),  மார்க் செப்மென், கொலின் டே கிராண்ட்ஹோம்,  லொக்கி பெர்கியுசன், மார்டின் கப்டில், அடெம் மில்னே, கொலின் முன்ரோ, செத் ரான்ஸ்,  டிம் சீபெர்ட், இஷ் சோதி, டிம் சௌதீ, ரொஸ் டெய்லர்

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<