இறுதிப் போட்டியில் விமானப்படை மகளிர் அணிக்கு இலகுவான வெற்றி

300
Air Force gun down Army to win Women’s T20 Championship

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான பிரிவு 1 இன் டி20 இறுதிப் போட்டியில் விமானப்படை மகளிர் அணி இராணுவ மகளிர் அணியை 10.5 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாம்பியன் ஆகியது.

நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட இராணுவ மகளிர் அணியின் தலைவி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.  இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விமானப்படை மகளிர் அணியினர்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்களைப் பெற்றனர். 

இதில் அதிக பட்சமாக யசோதா மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், டிலானி மனோதர 24 ஓட்டங்களையும், சிரிபாலி வீரக்கொடி 16 ஓட்டங்களையும் பெற்றனர். இராணுவ மகளிர் அணி சார்பாகப் பந்துவீச்சில் லக்மாலி மெத்தானந்த 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இராணுவ மகளிர் அணியினர் 10.5 ஓவர்களில் சுதீபா அதுகொர்லவின் அதிரடியான பந்துவீச்சினால் சகல விக்கட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது 

இராணுவ மகளிர் அணி சார்பாக நிபுணி ஹன்ஷிகா 8 ஓட்டங்களைப் பெற்றார். சுதீபா அதுகொர்ல 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கட்டுகளைக் கைப்பற்றி இராணுவ மகளிர் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார் 

இதனால் விமான படை அணியினர் 75 ஓட்டங்களால் அபார வெற்றி அடைந்து 2016ஆம் ஆண்டின் இருபது ஓவர் போட்டியின் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை மகளிர் அணி : 108/6 (20) யசோதா மெண்டிஸ் 36, டிலானி மனோதர 24, சிரிபாலி வீரக்கொடி 16, லக்மாலி மெத்தானந்த 4/27, செரினா ரவிக்குமார் 1/12

இராணுவ மகளிர் அணி : 33 (10.5) நிபுணி ஹன்ஷிகா 8, சுதீப்பா அத்துகோரேல்ல 5/09, அமா காஞ்சனா 2/08, சமாரி போல்கம்போலே 1/04, சிரிபாலி வீரக்கொடி 1/08

முடிவு : விமானப் படை மகளிர் அணிக்கு 75 ஓட்டங்களால் அபார வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்