கடந்த 8ஆம் திகதி ஏகல விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற விமானப்படை மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சொலிட் விளையாட்டுக் கழக அணி விமானப்படை அணியை 2-1 என்ற ரீதியில் வெற்றி பெற்று இருந்தது.
ஆனால் அதன்பின் போட்டிக் குழுவின் தீர்மானத்தின்படி போட்டியின் வெற்றி விமானப்படைக்கு வழங்கப்பட்டது. சொலிட் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடிய அபிஸ் ஒலயெமி என்ற வெளிநாட்டு வீரர் செல்லுபடியற்ற விசாவைப் பெற்று இருந்தமையினாலேயே இந்த வெற்றி விமானப்படைக்கு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் பின் விமானப்படை அதிகாரிகள் தகுதியில்லாத வீரர் விளையாடியமை தொடர்பில் கால்பந்து கூட்டமைப்புக்கு தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அதன்பின் இது தொடர்பான விசாரணை நேற்று (10) இடம்பெற்றது. அந்த விசாரணையின் முடிவின்படி அபிஸ் ஒலயெமி அப்போட்டியின் போது செல்லுபடியற்ற விசாவைக் கொண்டிருந்தமையால் அவர் தகுதியற்ற வீரர் என்று முடிவு செய்யப்பட்டார். இதனால் வெற்றி விமானப்படை அணிக்கு வழங்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி விமானப்படை தனது காலிறுதிப் போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகத்தை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் சந்திக்கவுள்ளது.