LPL தொடரில் புதிதாக இணையும் இங்கிலாந்து, பாக் வீரர்கள்!

750
Ahsan Ali makes it to the Galle Gladiators

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அஹமட் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பாகிஸ்தானின் இளம் வீரர் அஹ்சன் அலி அவ்வணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு மாற்றங்களை அணிகளில் ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில், மிகுதி உள்ள இடங்களை நிரப்பும் பணிகளிலும் அணிகள் ஈடுபட்டு வருகின்றன.

>> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணையும் இங்கிலாந்து, தென்னாபிரிக்க வீரர்கள்!

அதன்படி, காலி க்ளேடியேட்டர்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னணி வீரர் சர்பராஸ் அஹமட் நியூசிலாந்து தொடர் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அஹ்சன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அஹ்சன் அலி பாகிஸ்தான் தேசிய அணிக்காக 2 T20I  போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 50 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அஹ்சன் அலி 1047 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை, காலி க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு அடுத்தப்படியாக, கொழும்பு கிங்ஸ் அணி தங்களது அணியில் இங்கிலாந்து அணியின் லோரி எவன்ஸை இணைத்துள்ளது.

லோரி எவன்ஸ் இங்கிலாந்து அணிக்காக போட்டிகளில் விளையாடாவிட்டாலும், சர்வதேசத்தில் நடைபெறும் T20 லீக் போட்டிகளில் விளையாடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் மொத்தமாக 156 T20 போட்டிகளில் விளையாடி 33.5 என்ற சிறந்த சராசரியுடன் 3624 ஓட்டங்களை குவித்துள்ளார்.

>> Video – கிரிக்கெட்டில் சாதிக்க போராட்டம் வேண்டும் – PRAKHASH SCHAFTER

அதேநேரம், நேற்றைய தினம் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியில் ரவி பொப்பாரா, டொம் மொரிஸ், கெயல்  அபோட் மற்றும் டுன்னே ஒலிவீர் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டனர்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 16ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<