இந்திய அணியின் தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்

India Cricket

211

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு அந்த அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அஜித் அகார்கர் விண்ணப்பித்துள்ளார்.

வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான அஜித் அகார்கர் தன்னுடைய ஓய்வுக்கு பின்னர் உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளின் பயிற்றுவிப்பு குழாத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

>> துஷ்மந்த சமீர நீக்கம் ; டில்ஷான் மதுசங்கவுக்கு வாய்ப்பு!

இறுதியாக IPL தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வந்தார். இவ்வாறான நிலையில் நேற்று வியாழக்கிழமை (29) அவருடைய ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை என டெல்லி கெபிட்டல்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் அஜித் அகார்கர் தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கான விண்ணப்பத்தை இந்திய கிரிக்கெட் சபையிடம் கையளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக செயற்பட்டுவந்த சேட்டன் சர்மா கடந்த பெப்ரவரி மாதம் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். எனவே புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை இந்திய கிரிக்கெட் சபை அடுத்த வாரம் நியமிக்கவுள்ளது. தேர்வுக்குழுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் (30) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<