மிச்சல் மார்ஷ் தலைமையில் T20 உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக்கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு
ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்ய இறுதி தினமாக மே 02ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணிகளும் தமது வீரர் குழாம்களை வெளியிட்டு வருகின்றன.
அதன் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவும் மிச்சல் மார்ஷ் தலைமையில் T20 உலகக் கிண்ணத்திற்கான தமது அணிக்குழாத்தினை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் கடந்த 2022ஆம் ஆண்டிலேயே ஆஸி. அணியை T20I போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த கெமரூன் கீரின், அஷ்டன் ஏகார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை முன்னணி சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு T20 உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவுஸ்திரேலியா 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் இன்றி ஆடும் முதல் உலகக் கிண்ணத் தொடராக 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடர் அமையவுள்ளது.
அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் அதிரடி துடுப்பாட்டவீரரான ஜேக் பிரஷர்–மெக்கேர்க் இற்கும் T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவுஸ்திரேலிய அணி தமது T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் ஓமான் அணியை பார்படோஸ் நகரில் வைத்து ஜூன் மாதம் 06ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய குழாம்
மிச்சல் மார்ஷ் (தலைவர்), அஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நதன் எல்லிஸ், கெமரூன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ், கிளேன் மெக்ஸ்வெல், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், டேவிட் வோனர், அடம் ஷம்பா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<