சுற்றுலா நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தினை T20 போட்டிகளில் அவர்களது அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தியிருப்பதுடன் 7 விக்கெட்டுக்களால் வரலாற்று வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது.
கிரிக்கெட்டில் முதல்முறை ஸ்மார்ட் பந்து பயன்பாடு
தற்போது பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கே 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடும் நிலையில், தொடரின் முதல் போட்டி இன்று (1) டாக்காவில் ஆரம்பமாகியது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர், பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
நியூசிலாந்து அணி பெற்ற இந்த 60 ஓட்டங்கள் T20 போட்டிகள் வரலாற்றில் அவர்கள் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாக இரண்டாவது தடவையாக பதிவாகியிருந்தது. இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்திலும் நியூசிலாந்து அணியினர் இலங்கையுடன் 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெடடுக்களையும் பறிகொடுத்து T20 போட்டிகளில் அவர்களின் அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் டேல் ஸ்டெய்ன் ஓய்வு
இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் அணித்தலைவர் டொம் லேதம் ஆகியோர் தலா 18 ஓட்டங்கள் வீதம் பெற்று, தமது தரப்பில் கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, நசும் அஹ்மட், சயீபுத்தின் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 61 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறித்த போட்டி வெற்றி இலக்கினை 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை அடைந்து கொண்டது. பங்களாதேஷ் அணியின் வெற்றியினை சகீப் அல் ஹசன் 25 ஓட்டங்களுடன் உறுதி செய்தார். அதோடு இப்போட்டியின் வெற்றியே பங்களாதேஷ் அணி T20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்த முதல் வெற்றியாகவும் அமைகின்றது.
இன்னும் இப்போட்டியின் வெற்றியோடு பங்களாதேஷ் அணி, 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
நியூசிலாந்து – 60 (16.5) ஹென்ரி நிக்கோல்ஸ் 18, டொம் லேதம் 18, முஸ்தபிசுர் ரஹ்மான் 13/3, நசும் அஹ்மட் 5/2, சயீபுத்தின் 7/2, சகீப் அல் ஹஸன் 10/2
பங்களாதேஷ் – 62/3 (15) சகீப் அல் ஹஸன் 25
முடிவு – பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…