லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடி வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான அப்தாப் அலாம் (Aftab Alam), தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக அந்த அணி நிர்வாகம் இன்று (02) அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக ஆப்கானிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video – Dasun Shanaka வின் CAPTAINCY இன்னிங்ஸ்!
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் ஹம்பாந்தோட்டையில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியது.
இதுவரை 8 லீக் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தசுன் ஷானக தலைமையிலான தம்புள்ள வைகிங் அணி, 2 போட்டிளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவி புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
இதுஇவ்வாறிருக்க, தம்புள்ள வைகிங் அணியில் இடம்பெற்றுள்ள 28 வயதான ஆப்கானிஸ்தானின் வலதுகை வேகப் பந்துவீச்சாளரான அப்தாப் அலாம், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிராக விளையாடியிருந்தார்.
குறித்த போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய அவர், 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்ததுடன், வனிந்து ஹசரங்கவின் விக்கெட்டினை எடுத்தார்.
எதுஎவ்வாறயினும், கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக நேற்று (01) நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் அப்தாப் அலாம் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக கசுன் ராஜித விளையாடியிருந்தார்.
உபாதைக்குள்ளாகியுள்ள ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்
இந்த நிலையில், தம்புள்ள வைகிங் அணியின் ஊடகப்பிரிவு இன்று (02) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், அப்தாப் அலாம் தனிப்பட்ட காரணங்களுக்கான நாடு திரும்பவுள்ளதால், தம்புள்ள வைகிங் அணியின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்தாப் அலாம் தம்புள்ள அணியில் இருந்து விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக பிரதியீட்டு வீரரொருவர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பெரும்பாலும் இலங்கையின் உள்ளூர் வீரரொருவருக்கு தம்புள்ள வைகிங் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Video – Dambulla Viiking அணியில் இணையும் சதீர சமரவிக்ரம..!
முன்னதாக கண்டி டஸ்கர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடிய தம்புள்ள வைகிங் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஓசத பெர்ணான்டோ துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது உபாதையினை எதிர்கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட MRI பரிசோதனை அறிக்கையில் கணுக்காலை சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஓசதவின் உபாதையினை கருத்திற்கொண்டு பிரதியீட்டு வீரர்களில் ஒருவராக தம்புள்ள வைகிங் அணியில், இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<