ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டவீரரான டொம் கொஹ்லர் கட்மோர் உடற்தகுதி பிரச்சினை காரணமாக லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் அஷார் அலி!
அந்தவகையில் இங்கிலாந்தை சேர்ந்த கட்மோர் போதிய உடற்தகுதியினை நிரூபிக்க தவறிய நிலையிலையே, LPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார்.
கட்மோர் இல்லாத நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி பங்களாதேஷை சேர்ந்த துடுப்பாட்ட சகலதுறைவீரரான அபீப் ஹொசைனை பிரதியீட்டு வீரராக அழைத்திருக்கின்றது.
இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அபீப் ஹொசைன் சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார்.
அத்துடன் அபீப் ஹொசைன் T20 அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுக்களை சாய்த்த இளம் வயது (17 வருடங்கள் 72 நாட்கள்) பந்துவீச்சாளராக சாதனை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு இதுவரை 142 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் அபீப் ஹொசைன் 2500 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 31 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
>> PSL T20 தொடர் ஏலத்தில் இரு இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு
இதேநேரம் ஜப்னா கிங்ஸ் அணி இந்த LPL தொடரில் ஆடும் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடன் நடைபெறவிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<