சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து நவீன் உல் ஹக் ஓய்வு

Cricket World Cup 2023

282

ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்த நவீன் உல் ஹக் தன்னுடைய 25 வயதில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

T20I போட்டிகளில் புதிய வரலாறு படைத்த நேபாள கிரிக்கெட் அணி

உலகக்கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றுள்ள இவர், உலகக்கிண்ண தொடர் முடிவடைந்ததுடன் ஓய்வுபெறவுள்ளார்.

தன்னுடைய ஓய்வு அறிவிப்பு தொடர்பில் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இவர், “என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியமை தொடர்பில் நான் பெருமையடைவதுடன், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேன். எனினும் T20I போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட எதிர்பார்க்கிறேன்.

இது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவல்ல. எனினும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. எனக்கு வாய்ப்பு வழங்கிய கிரிக்கெட் சபை மற்றும் ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

நவீன் உல் ஹக் சர்வதேத்தில் நடைபெறும் பல சர்வதேச லீக் தொடர்களில் விளையாடி வருகின்றார். ஆப்கானிஸ்தான் அணிக்காக இறுதியாக 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த போதும், தொடர்ச்சியாக அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் அணிக்காக மொத்தமாக 7 ஒருநாள் மற்றும் 27 T20I போட்டிகளில் இவர் இதுவரை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<