ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை ஆப்கானிஸ்தான் 41 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கின்றது.
மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த வெற்றியுடன் இரண்டு மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
ஆப்கான் அணியை இலகுவாக வீழ்த்திய மே.தீவுகள்
எவின் லுவிஸின் அதிரடி அரைச்சதம் மற்றும்….
கடந்த வியாழக்கிழமை (14) இடம்பெற்ற இந்த T20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் ஆப்கானிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகளை சனிக்கிழமை (16) இரண்டாவது T20 போட்டியில் சந்தித்தது.
லக்னோ நகரில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பின்னர், 20 ஓவர்களினையும் எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஹஸ்ரத்துல்லா சஷாய் மற்றும் கரீம் ஜனாட் ஆகியோர் தலா 26 ஓட்டங்கள் வீதம் பெற்று தமது தரப்பில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற வீரர்களாக மாறினர்.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க ஜேசன் ஹொல்டர் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் ராம்டின் 24 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.
இரட்டைச் சதங்களில் பிராட்மனை முந்திய மயங்க் அகர்வால்
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்…
அதேநேரம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான கரீம் ஜனட் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜனாட் தெரிவாகியிருந்தார். இனி மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ஆப்கானிஸ்தான் – 147/7 (20) ஹஷ்ரத்துல்லா சஷாய் 26, கரீம் ஜனாட் 26, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 23/3, ஜேசன் ஹொல்டர் 23/2, கீமோ போல் 28/2
மேற்கிந்திய தீவுகள் – 106/8 (20) தினேஷ் ராம்டின் 24, கரீம் ஜனாட் 11/5
முடிவு – ஆப்கானிஸ்தான் 41 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<