கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 21ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியினை தென்னாபிரிக்கா (டக்வெத் லூயிஸ் முறையில்) 9 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.
மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற…..
கார்டிப் நகரில் பகலிரவு ஆட்டமாக நேற்று (15) ஆரம்பான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஆப்கானிஸ்தான் அணிக்காக வழங்கினார்.
குல்படின் நயீப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியினை தழுவியது. இந்நிலையில் அவ்வணி இப்போட்டியின் மூலம் இந்த உலகக் கிண்ணத்தொடரில் தமது முதல் உலகக் கிண்ண வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் நஜீபுல்லாஹ் சத்ரானிற்கு பதிலாக அஸ்கர் ஆப்கான் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி
ஹஸ்ரத்துல்லா சஷாய், நூர் அலி சத்ரான், றஹ்மத் சாஹ், ஹஸ்மதுல்லா சஹிதி, அஸ்கார் ஆப்கான், குல்படின் நயீப் (அணித்தலைவர்), மொஹமட் நபி, இக்ராம் அய்க்கீல், ரஷீத் கான், அப்தாப் ஆலம், ஹமிட் ஹஸன்
இதேநேரம், இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த தென்னாபிரிக்க அணியிலும் ஒரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. இங்கே, வேகப் பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடிக்கு பதிலாக பிய்ரன் ஹென்ரிக்ஸ் உள்வாங்கப்பட்டிருந்தார்.
தென்னாபிரிக்க அணி
குயின்டன் டி கொக், ஹஷிம் அம்லா, எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன், டேவிட் மில்லர், அன்டைல் பெலுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, பிய்ரன் ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹிர்
பல சாதனைகளுடன் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து போட்டி
உலகக் கிண்ணத் தொடரில் சௌத்ஹெம்ப்டன் நகரில் நேற்று….
பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த ஹஷ்ரத்துல்லா சஷாய் 22 ஓட்டங்களை மட்டுமே பெற, புதிய துடுப்பாட்ட வீரராக வந்த றஹ்மத் சாஹ் 6 ஓட்டங்களை மட்டுமே பெற்று வெளியேறினார்.
தொடர்ந்து போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டதால் ஆட்டம் அணிக்கு 48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. மழையினை அடுத்து தொடர்ந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை சந்தித்தது.
கடைசியில் 34.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது லீக் போட்டியில்….
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ரஷீத் கான் 25 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். அதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த நூர் அலி சத்ரானும் 32 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதேநேரம் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக மணிக்கட்டு சுழல் வீரரான இம்ரான் தாஹிர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு, கிறிஸ் மொர்ரிஸ் 3 விக்கெட்டுகளையும், அன்டைல் பெஹ்லுக்வேக்வேயோ 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து டக்வெத் லூயிஸ் முறையில் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 127 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் சிறந்த முதல் விக்கெட் இணைப்பாட்டம் (104) ஒன்றை வழங்கினர்.
இலங்கை அணியை இந்தியாவுடன் பிரதி செய்ய முடியாது: திமுத்
திமுத் கருணாரத்னவிற்கு இந்த ஆண்டு மிகவும் சுவாரஷ்யமாக…..
இவர்களின் இணைப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க அணி போட்டியின் வெற்றி இலக்கினை 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து 131 ஓட்டங்களுடன் அடைந்தது.
தென்னாபிரிக்க அணியின் சார்பில் அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த குயின்டன் டி கொக் ஒருநாள் போட்டிகளில் பெற்றுக் கொண்ட தனது 22ஆவது அரைச்சதத்துடன் 84 பந்துகளுக்கு 8 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றிருந்தார். மறுமுனையில் ஹஷிம் அம்லா 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் குல்படின் நயீப் தென்னாபிரிக்காவின் வீழ்த்தப்பட்ட குயின்டன் டி கொக்கின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது தென்னாபிரிக்க அணியின் சுழல்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு வழங்கப்பட்டது.
உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு….
இப்போட்டி மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ள தென்னாபிரிக்க அணி, தமது அடுத்த மோதலில் நியூசிலாந்து அணியை வரும் புதன்கிழமை (19) பார்மிங்கமில் வைத்து சந்திக்கின்றது.
இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) மன்செஸ்டரில் நடைபெறவுள்ள தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hazratullah Zazai | c Rassie van der Dussen b Kagiso Rabada | 22 | 23 | 3 | 0 | 95.65 |
Noor Ali Zadran | b Imran Tahir | 32 | 58 | 4 | 0 | 55.17 |
Rahmat Shah | lbw b Chris Morris | 6 | 22 | 1 | 0 | 27.27 |
Hashmatullah Shahidi | c Faf du Plessis b Andile Phehlukwayo | 8 | 22 | 1 | 0 | 36.36 |
Asghar Afghan | c & b Imran Tahir | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Mohammad Nabi | b Andile Phehlukwayo | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Ikram Alikhil | c Hashim Amla b Chris Morris | 9 | 33 | 0 | 0 | 27.27 |
Gulbadin Naib | c Aiden Markram b Imran Tahir | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Rashid Khan | c Rassie van der Dussen b Imran Tahir | 35 | 25 | 6 | 0 | 140.00 |
Hamid Hassan | c Faf du Plessis b Chris Morris | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Aftab Alam | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0) |
Total | 125/10 (34.1 Overs, RR: 3.66) |
Fall of Wickets | 1-39 (8.2) Hazratullah Zazai, 2-56 (15.1) Rahmat Shah, 3-69 (20.4) Hashmatullah Shahidi, 4-69 (21.1) Noor Ali Zadran, 5-70 (21.5) Asghar Afghan, 6-70 (22.1) Mohammad Nabi, 7-77 (25.2) Gulbadin Naib, 8-111 (32.4) Ikram Alikhil, 9-125 (33.5) Rashid Khan, 10-125 (34.1) Hamid Hassan, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 8 | 1 | 36 | 1 | 4.50 | |
Beuran Hendricks | 5 | 1 | 25 | 0 | 5.00 | |
Andile Phehlukwayo | 8 | 1 | 18 | 2 | 2.25 | |
Chris Morris | 6.1 | 2 | 13 | 3 | 2.13 | |
Imran Tahir | 7 | 0 | 29 | 4 | 4.14 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hashim Amla | not out | 41 | 83 | 4 | 0 | 49.40 |
Quinton de Kock | c Mohammad Nabi b Gulbadin Naib | 68 | 72 | 8 | 0 | 94.44 |
Andile Phehlukwayo | not out | 17 | 17 | 2 | 1 | 100.00 |
Extras | 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 131/1 (28.5 Overs, RR: 4.54) |
Fall of Wickets | 1-104 (22.5) Quinton de Kock, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Aftab Alam | 5 | 1 | 16 | 0 | 3.20 | |
Hamid Hassan | 4 | 1 | 11 | 0 | 2.75 | |
Rashid Khan | 7 | 0 | 45 | 0 | 6.43 | |
Gulbadin Naib | 6 | 0 | 29 | 1 | 4.83 | |
Mohammad Nabi | 6.5 | 0 | 29 | 0 | 4.46 |
முடிவு – தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் (டக்வெத் லூயிஸ் முறையில்) வெற்றி