நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்காக மோதிய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கட்டாய வெற்றிக்காக நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?
மேலும் இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி, T20 உலகக் கிண்ணத்தில் தாம் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரில் தமது அரையிறுதி வாய்ப்பினை அதிகரிக்க நமீபிய அணி, சுபர் 12 சுற்றில் தமது முதல் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றது.
சுபர் 12 சுற்று குழு 2 இல் காணப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபிய அணிகள் மோதிய போட்டி இன்று (31) அபுதாபியில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து, 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களம் வந்திருந்த மொஹமட் சஹ்ஷாத் 33 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 45 ஓட்டங்கள் பெற, ஹஸ்ரத்துல்லா சஷாய் 33 ஓட்டங்களை எடுத்தார்.
அதோடு அதிரடியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அணித்தலைவர் மொஹமட் நபி வெறும் 17 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 32 ஓட்டங்களை எடுக்க, இப்போட்டியோடு சர்வதேச
கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் சிரேஷ்டவீரர் அஸ்கார் அப்கான் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிற்கு முதல் தோல்வி
நமீபிய அணியின் பந்துவீச்சு சார்பில் ருபென் ட்ரம்பல்மென் மற்றும் லொப்டி ஈட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நமீபிய அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.
நமீபிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேவிட் விஸே அதிகபட்சமாக 26 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் ஹமிட் ஹஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும், குல்படின் நயிப் 2 விக்கெட்டுக்கள் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக நவீன்-உல்-ஹக் தெரிவாகினார். இனி இப்போட்டியில் ஆடிய நமீபிய அணி T20 உலகக் கிண்ணத்திற்கான தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (02) பாகிஸ்தான் அணியினை அணியினை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (03) இந்தியாவினை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: controllers/Embed.php
Line Number: 86
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: embed/match_result.php
Line Number: 115
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
முடிவு – ஆப்கானிஸ்தான் 62 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<