Home Tamil ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான்

ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான்

225

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது T20I போட்டியில் ஆப்கானிஸ்தான் 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதோடு இலங்கை சுற்றுப்பயணத்தினையும் ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

எனினும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினை 2-1 எனக் கைப்பற்றிக் கொள்கின்றது.

>>ஐசிசி வீரர்கள் தரவரிசையில் பெதும், ஹஸரங்கவுக்கு முன்னேற்றம்!

முன்னதாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதோடு முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் அகில தனன்ஞயவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்க, குசல் பெரேராவும் அணியில் இணைந்திருந்தார்.

இலங்கை XI

கமிந்து மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, தசுன் ஷானக, அஞ்செலோ மெதிவ்ஸ், வனிந்து ஹஸரங்க (தலைவர்), அகில தனன்ஞய, நுவான் துஷார, மதீஸ பதிரன

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஆப்கான் அணி ஹஸ்ரத்துல்லா சஷாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரது ஆட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றது. பின்னர் 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பௌண்டரிகளோடு 70 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இது குர்பாஸின் 7ஆவது T20I அரைச்சதமாகவும் மாறியது. இதேவேளை ஹஸ்ரத்துல்லா சஷாய் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 45 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பௌண்டரிகளோடு 70 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இது குர்பாஸின் 7ஆவது T20I அரைச்சதமாகவும் மாறியது. இதேவேளை ஹஸ்ரத்துல்லா சஷாய் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 45 ஓட்டங்கள் எடுத்தார்.

>>பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே.எல் ராகுல்

இலங்கை அணியின் பந்துவீச்சில் மதீஸ பதிரன மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, வனிந்து ஹஸரங்க ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 210 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது இறுதிவரை போட்டியின் வெற்றிக்காக போராடிய போதிலும் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களையே இலங்கை அணியினால் பெற முடிந்ததோடு இலங்கை 03 ஓட்டங்களால் வெற்றியினை தவற விட்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது காணப்பட்ட கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் போட்டியின் நடுவே உபாதை காரணமாக வெளியேறிய பெதும் நிஸ்ஸங்க 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
206/6 (20)

Afghanistan
209/5 (20)

Batsmen R B 4s 6s SR
Hazratullah Zazai lbw b Akila Dananjaya 45 22 6 2 204.55
Rahmanullah Gurbaz c Sadeera Samarawickrama b Wanidu Hasaranga 70 43 7 1 162.79
Ibrahim Zadran c Wanidu Hasaranga b Akila Dananjaya 10 9 1 0 111.11
Azmatullah Omarzai c Kusal Perera b Matheesha Pathirana 31 23 3 0 134.78
Mohammad Nabi not out 16 14 1 0 114.29
Karim Janat b Matheesha Pathirana 0 1 0 0 0.00
Mohammad Ishaq not out 16 8 1 1 200.00


Extras 21 (b 0 , lb 10 , nb 0, w 11, pen 0)
Total 209/5 (20 Overs, RR: 10.45)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 21 0 10.50
Nuwan Thushara 4 0 48 0 12.00
Matheesha Pathirana 4 0 42 2 10.50
Akila Dananjaya 4 0 37 2 9.25
Wanidu Hasaranga 4 0 35 1 8.75
Dasun Shanaka 2 0 16 0 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 60 30 8 2 200.00
Kusal Mendis c Sharafuddin Ashraf b Fareed Ahmad 16 13 3 0 123.08
Kusal Perera lbw b Noor Ahmad 0 2 0 0 0.00
Wanidu Hasaranga c Ibrahim Zadran b Mohammad Nabi 13 11 2 0 118.18
Sadeera Samarawickrama c Mohammad Ishaq b Qais Ahmed 23 12 2 1 191.67
Kamindu Mendis not out 65 39 7 2 166.67
Angelo Mathews c Qais Ahmed b Mohammad Nabi 4 5 0 0 80.00
Dasun Shanaka run out (Mohammad Ishaq) 13 8 1 1 162.50
Akila Dananjaya not out 4 1 1 0 400.00


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 206/6 (20 Overs, RR: 10.3)
Bowling O M R W Econ
Wafiullah Tarakhil 3 0 35 0 11.67
Azmatullah Omarzai 4 0 42 0 10.50
Fareed Ahmad 2 0 30 1 15.00
Noor Ahmad 4 0 37 1 9.25
Mohammad Nabi 4 0 35 2 8.75
Qais Ahmed 2 0 17 1 8.50
Karim Janat 1 0 9 0 9.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<