Home Tamil ஆப்கானை ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்த இலங்கை

ஆப்கானை ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்த இலங்கை

227

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

>>ஐசிசியின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஷெமார் ஜோசப்

மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆப்கானை இலங்கை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் முன்னதாக ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

ஆப்கான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய இலங்கை இப்போட்டிக்கான அணியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. இலங்கை குழாத்தில் மகீஷ் தீக்ஷன, வனிந்து ஹஸரங்க ஆகியோருக்குப் பதிலாக துனித் வெல்லாலகே மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை XI

அவிஷ்க பெர்னாண்டோபெதும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ்,

(தலைவர்)சதீர சமரவிக்ரமசரித் அசலன்கஜனித் லியனகே,

அகில தனன்ஜயதுனித் வெல்லாகேஅசித பெர்னாண்டோப்ரமோத் மதுசான்டில்சான் மதுசங்க

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஆப்கான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் சாஹ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 48 ஓட்டங்கள் எடுக்க, றஹ்மத் சாஹ் இந்த ஒருநாள் தொடரில் தன்னுடைய அடுத்தடுத்த அரைச்சதங்களுடன் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் மத்திய வரிசையில் களம் வந்த அஷ்மத்துல்லா ஒமர்சாயின் அரைச்சத உதவியோடு 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 266 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக் கொண்டது. அஸ்மத்துல்லா ஒமர்சாய் 59 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரமோத் மதுசான் 3 விக்கெட்டுக்களையும் அசித பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 267 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது அதிரடியான ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 35.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 5ஆவது ஒருநாள் சதத்தோடு 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது அவரின் 6ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் மாறியது. அதோடு குசல் மெண்டிஸ் வெறும் 29 ப ந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றார்.

ஆப்கான் பந்துவீச்சில் கைஸ் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இப்போட்டியில் சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
267/3 (35.2)

Afghanistan
266/10 (48.2)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Akila Dananjaya 48 57 6 1 84.21
Ibrahim Zadran run out (Asitha Fernando) 13 10 3 0 130.00
Rahmat Shah lbw b Dunith Wellalage 65 77 7 1 84.42
Hashmatullah Shahidi c Pathum Nissanka b Akila Dananjaya 5 8 0 0 62.50
Azmatullah Omarzai b Asitha Fernando 54 59 4 0 91.53
Ikram Alikhil b Dunith Wellalage 32 38 2 1 84.21
Mohammad Nabi c Sadeera Samarawickrama b Pramod Madushan 14 21 0 1 66.67
Sharafuddin Ashraf c Charith Asalanka b Pramod Madushan 4 9 0 0 44.44
Qais Ahmed c Sadeera Samarawickrama b Pramod Madushan 11 4 1 1 275.00
Fareed Ahmad b Asitha Fernando 5 5 1 0 100.00
Fazal Haq Farooqi not out 0 3 0 0 0.00


Extras 15 (b 0 , lb 5 , nb 1, w 9, pen 0)
Total 266/10 (48.2 Overs, RR: 5.5)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 6 0 52 0 8.67
Pramod Madushan 8.2 0 45 3 5.49
Asitha Fernando 9 0 44 2 4.89
Dunith Wellalage 10 0 38 2 3.80
Janith Liyanage  2 0 11 0 5.50
Akila Dananjaya 10 0 54 2 5.40
Charith Asalanka 3 0 17 0 5.67


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Qais Ahmed b Mohammad Nabi 118 101 16 2 116.83
Avishka Fernando c Sharafuddin Ashraf b Qais Ahmed 91 66 10 5 137.88
Kusal Mendis b Mohammad Nabi 40 29 0 4 137.93
Sadeera Samarawickrama not out 8 5 1 0 160.00
Charith Asalanka not out 7 13 0 0 53.85


Extras 3 (b 0 , lb 0 , nb 2, w 1, pen 0)
Total 267/3 (35.2 Overs, RR: 7.56)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 5 0 54 0 10.80
Azmatullah Omarzai 4 0 29 0 7.25
Sharafuddin Ashraf 6 0 47 0 7.83
Fareed Ahmad 4 0 45 0 11.25
Mohammad Nabi 9.2 0 46 1 5.00
Qais Ahmed 7 0 46 2 6.57



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<