சுற்றுலா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
>> ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஷெமார் ஜோசப்
முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது. இப்போட்டிக்கான இலங்கை அணி முதல் போட்டியில் உபாதைக்குள்ளான துஷ்மன்த சமீரவிற்கு தொடரில் ஓய்வு வழங்க, அசித பெர்னாண்டோ அணிக்குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
இலங்கை XI
அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, அசித பெர்னாண்டோ, ப்ரமோத் மதுசான், டில்சான் மதுசங்க
இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்ப வீரர்களை (பெதும் நிஸ்ஸங்க 18, அவிஷ்க பெர்னாண்டோ 5) இழந்து தடுமாறிய போதிலும் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஜோடி 103 ஓட்டங்களை பெற்றது.
இந்த இணைப்பாட்டத்தினை அடுத்து இலங்கை அணியின் மூன்றாவது விக்கெட்டாக சதீர சமரவிக்ரம தன்னுடைய 8ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு ஆட்டமிழந்தார். சதீர ஆட்டமிழக்கும் போது 3 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து குசல் மெண்டிஸ் தன்னுடைய 28ஆவது ஒருநாள் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
>> ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஷெமார் ஜோசப்
தொடர்ந்து சரித் அசலன்க மற்றும் ஜனித் லியனகேவின் சிறப்பாட்டங்களோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை 308 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சரித் அசலன்க 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 74 பந்துகளுக்கு 97 ஓட்டங்களை எடுத்து தன்னுடைய நான்காவது ஒருநாள் சதத்தினை வெறும் மூன்று ஓட்டங்களால் தவறவிட்டார். இதேநேரம் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதம் பெற்ற ஜனித் லியனகே 48 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 50 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இவர்கள் தவிர கைஸ் அஹ்மட், நூர் அஹ்மட் மற்றும் பசால்ஹக் பரூக்கி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 309 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கான் அணிக்கு இப்ராஹிம் சத்ரான் மற்றும் றஹ்மத் சாஹ் ஆகியோர் சிறந்த ஆரம்பம் தந்த போதிலும் வனிந்து ஹஸரங்கவின் சுழலில் தடுமாறத் தொடங்கிய ஆப்கான் அணியானது 33.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 153 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
>> டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகிய விராட் கோஹ்லி!
ஆப்கான் அணியின் துடுப்பாட்டத்தின் சார்பில் றஹ்மத் சாஹ் 63 ஓட்டங்கள் எடுக்க, இப்ராஹிம் சத்ரான் 54 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, டில்சான் மதுசான் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் சரித் அசலன்க தெரிவானார். இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி புதன்கிழமை (14) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Azmatullah Omarzai | 18 | 17 | 3 | 0 | 105.88 |
Avishka Fernando | c Gulbadin Naib b Fazal Haq Farooqi | 5 | 23 | 0 | 0 | 21.74 |
Kusal Mendis | c Rahmanullah Gurbaz b Azmatullah Omarzai | 61 | 65 | 6 | 1 | 93.85 |
Sadeera Samarawickrama | c Mohammad Nabi b Qais Ahmed | 52 | 61 | 3 | 0 | 85.25 |
Charith Asalanka | not out | 97 | 74 | 9 | 2 | 131.08 |
Janith Liyanage | c Rahmat Shah b Noor Ahmad | 50 | 48 | 2 | 2 | 104.17 |
Wanidu Hasaranga | c Ibrahim Zadran b Azmatullah Omarzai | 14 | 13 | 2 | 0 | 107.69 |
Extras | 11 (b 0 , lb 2 , nb 1, w 8, pen 0) |
Total | 308/6 (50 Overs, RR: 6.16) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fazal Haq Farooqi | 10 | 1 | 55 | 1 | 5.50 | |
Azmatullah Omarzai | 10 | 0 | 56 | 3 | 5.60 | |
Mohammad Nabi | 10 | 0 | 38 | 0 | 3.80 | |
Gulbadin Naib | 5 | 0 | 48 | 0 | 9.60 | |
Noor Ahmad | 8 | 0 | 54 | 1 | 6.75 | |
Qais Ahmed | 7 | 0 | 55 | 1 | 7.86 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Kusal Mendis b Asitha Fernando | 8 | 20 | 1 | 0 | 40.00 |
Ibrahim Zadran | c Kusal Mendis b Asitha Fernando | 54 | 76 | 6 | 0 | 71.05 |
Rahmat Shah | lbw b Wanidu Hasaranga | 63 | 69 | 7 | 0 | 91.30 |
Hashmatullah Shahidi | b Wanidu Hasaranga | 9 | 12 | 1 | 0 | 75.00 |
Azmatullah Omarzai | b Pramod Madushan | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Mohammad Nabi | lbw b Wanidu Hasaranga | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Ikram Alikhil | run out (Kusal Mendis) | 4 | 1 | 1 | 0 | 400.00 |
Gulbadin Naib | lbw b Wanidu Hasaranga | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Qais Ahmed | c Pathum Nissanka b Pramod Madushan | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Noor Ahmad | lbw b Pramod Madushan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Fazal Haq Farooqi | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 0 , lb 0 , nb 0, w 10, pen 0) |
Total | 153/10 (33.5 Overs, RR: 4.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 7 | 1 | 28 | 2 | 4.00 | |
Pramod Madushan | 6 | 0 | 37 | 1 | 6.17 | |
Asitha Fernando | 6 | 0 | 23 | 2 | 3.83 | |
Maheesh Theekshana | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Janith Liyanage | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Wanidu Hasaranga | 6.5 | 0 | 27 | 4 | 4.15 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<