சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை 4 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
>>ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்
முன்னதாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கைக்கு வழங்கியிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் வேகப்பந்துவீச்சாளரான பினுர பெர்னாண்டோவிற்கு T20I போட்டிகளில் வாய்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கை XI
தனன்ஞய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக, அஞ்செலோ மெதிவ்ஸ், வனிந்து ஹஸரங்க (தலைவர்), மகீஷ் தீக்ஸன, பினுர பெர்னாண்டோ, மதீஸ பதிரன
இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தினை சந்தித்ததோடு ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் இழந்து காணப்பட்டிருந்தது. எனினும் இந்த நேரத்தில் இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கிய அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க T20I போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தோடு இலங்கைத் தரப்பினை பலப்படுத்தினார். வெறும் 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட வனிந்து ஹஸரங்க 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார். ஹஸரங்கவின் பின்னர் சற்று தடுமாற்றத்தினை சந்தித்த இலங்கை அணியானது 19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பசால்ஹக் பரூக்கி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, நவீன்-உல்-ஹக் மற்றும் அஷ்மத்துல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியானது போட்டியின் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் இப்ராஹிம் சத்ரானின் அரைச்சதத்தோடு 19ஆவது ஓவர் வரை சிறப்பான நிலையில் காணப்பட்டிருந்தது. எனினும் மதீஷ பதிரனவின் அபார ஓவரின் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் மதீஷ பதிரன 19ஆவது ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களோடு மொத்தமாக 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேவேளை தசுன் ஷானக்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இப்ராஹிம் சத்ரான் 55 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது அவரது 5ஆவது T20I அரைச்சதமாகவும் மாறியது.
போட்டியின் ஆட்டநாயகனாக மதீஷ பதிரன தெரிவாகியிருந்தார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (19) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Rahmanullah Gurbaz b Fazal Haq Farooqi | 6 | 4 | 1 | 0 | 150.00 |
Kusal Mendis | c Azmatullah Omarzai b Fazal Haq Farooqi | 10 | 8 | 0 | 1 | 125.00 |
Dhananjaya de Silva | c Noor Ahmad b Naveen ul Haq | 24 | 17 | 2 | 1 | 141.18 |
Sadeera Samarawickrama | run out (Ibrahim Zadran) | 25 | 24 | 3 | 0 | 104.17 |
Charith Asalanka | c Rahmanullah Gurbaz b Noor Ahmad | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Wanidu Hasaranga | c Ibrahim Zadran b Naveen ul Haq | 67 | 32 | 7 | 3 | 209.38 |
Angelo Mathews | lbw b Karim Janat | 6 | 6 | 0 | 0 | 100.00 |
Dasun Shanaka | c Gulbadin Naib b Azmatullah Omarzai | 6 | 4 | 1 | 0 | 150.00 |
Maheesh Theekshana | c Mohammad Nabi b Fazal Haq Farooqi | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Binura Fernando | b Azmatullah Omarzai | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Matheesha Pathirana | not out | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Extras | 6 (b 0 , lb 3 , nb 0, w 3, pen 0) |
Total | 160/10 (19 Overs, RR: 8.42) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fazal Haq Farooqi | 4 | 0 | 25 | 3 | 6.25 | |
Naveen ul Haq | 3 | 0 | 25 | 2 | 8.33 | |
Azmatullah Omarzai | 4 | 0 | 30 | 2 | 7.50 | |
Noor Ahmad | 2 | 0 | 18 | 1 | 9.00 | |
Qais Ahmed | 3 | 0 | 36 | 0 | 12.00 | |
Karim Janat | 3 | 0 | 23 | 1 | 7.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ibrahim Zadran | not out | 67 | 55 | 8 | 0 | 121.82 |
Rahmanullah Gurbaz | c Matheesha Pathirana b Angelo Mathews | 13 | 6 | 1 | 1 | 216.67 |
Gulbadin Naib | b Wanidu Hasaranga | 16 | 17 | 2 | 0 | 94.12 |
Azmatullah Omarzai | c Dasun Shanaka b Matheesha Pathirana | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Mohammad Nabi | c Wanidu Hasaranga b Dasun Shanaka | 9 | 8 | 0 | 0 | 112.50 |
Najibullah Zadran | c Dhananjaya de Silva b Dasun Shanaka | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Karim Janat | lbw b Matheesha Pathirana | 20 | 16 | 2 | 0 | 125.00 |
Qais Ahmed | c Kamindu Mendis b Maheesh Theekshana | 7 | 4 | 1 | 0 | 175.00 |
Noor Ahmad | b Matheesha Pathirana | 9 | 6 | 0 | 1 | 150.00 |
Naveen ul Haq | b Matheesha Pathirana | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Fazal Haq Farooqi | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 4 , lb 0 , nb 0, w 8, pen 0) |
Total | 156/9 (20 Overs, RR: 7.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 2 | 0 | 16 | 1 | 8.00 | |
Binura Fernando | 4 | 0 | 44 | 0 | 11.00 | |
Maheesh Theekshana | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Matheesha Pathirana | 4 | 0 | 24 | 4 | 6.00 | |
Dasun Shanaka | 2 | 0 | 17 | 2 | 8.50 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<