சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இம்மாதம் 29ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
KL ராகுலுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ
அதனைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியும் 7ஆம் திகதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியிருந்தது. குறித்த தொடர் 1-1 என சமனிலையாகியது. குறித்த தொடர் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 2 (ஹம்பாந்தோட்டை)
- இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 4 (ஹம்பாந்தோட்டை)
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 7 (ஹம்பாந்தோட்டை)
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<