இலங்கை தொடருக்கான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Afghanistan tour of Sri Lanka 2024

249
Afghanistan tour of Sri Lanka 2024

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஷ்மதுல்லாஹ் சஹிடியின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் குழாத்தில் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

>>டொம் ஹார்ட்லியின் சுழலில் வீழ்ந்தது இந்தியா

எனினும் அவருக்கு பதிலாக மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் குவைஸ் அஹமட் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். அதேநேரம் உப தலைவராக ரஹமட் ஷா இணைக்கப்பட்டுள்ளதுடன், இப்ரஹீம் ஷர்தான், நூர் அலி ஷர்தான் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் தொடருக்கான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் பெப்ரவரி 2 தொடக்கம் 6ம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் குழாம்

ஹஷ்மதுல்லாஹ் சஹிடி, ரஹமட் ஷா, இக்ரம் அலிகில், மொஹமட் இசாக், இப்ரஹீம் ஷர்தான், நூர் ஷர்தான், அப்துல் மலிக், பஹீர் ஷா, நசீர் ஜமால், குவைஸ் அஹமட், ஷஹீர் கான், ஷியா உர் ரெஹ்மான் அக்பர், யமின் அஹ்மட்ஷி, நிஜாத் மசூத், மொஹமட் சலீம், நவீட் ஷர்தான்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<