இம்மாதம் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த ஆப்கானிஸ்தான் இளம் வீரர் கைஸ் அஹ்மட் விசா பிரச்சினை காரணமாக அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.
அவருடன், ஆப்கானிஸ்தான் இளம் வீரர்களான ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோரும் இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச T20i லீக் தொடரான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 18 முதல் ட்ரினிடாட் எண்ட் டொபேகோவில் ஆரம்பமாக உள்ளது.
ஆகஸ்டில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்
இந்த ஆண்டுக்கான (2020) கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் (CPL), எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம்…
மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், இதன் இறுதிப் போட்டி செப்டம்பர் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதனிடையே, T20 போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான ரஷீத் கான், மொஹமட் நபி, சஹீர் கான், நஜீபுல்லாஹ் சத்ரான், முஜிபுர் ரஹ்மான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க ஏற்கனவே கரீபியன் தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்று தற்போது சுய தனிமைப்படுத்தலுக்க உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் பட்டியலில் இடம்பிடித்த கைஸ் அஹ்மட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் நூர் அஹ்மட் ஆகிய மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கரீபியன் தீவுகளுக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையிலும், விசா சிக்கல் காரணமாக அவர்களால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதிலும் குறிப்பாக, அந்த மூன்று வீரர்களுக்கும் லண்டன் வழியாக கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்ற செல்ல விசா கிடைக்கவில்லை.
video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126
LPL காரணமாக IPL தொடரை தவறவிடும் லசித் மாலிங்க மற்றும் இசுரு உதான, T20i உலகக் கிண்ணத்துக்குப் பதிலாக…
இதில் 20 வயதான கைஸ் அஹ்மட், தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரரான இம்ரான் தாஹிர் இடம்பெற்றுள்ள கயானா அமேசன் வோரியர்ஸ் அணியிலும், 18 வயதான ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்காகவும், 15 வயதான சைனமன் சுழல் பந்துவீச்சாளரான நூர் அஹ்மட் சென்.லூசியா சோகஸ் அணிக்காகவும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வீரர்களில் கைஸ் அஹ்மட் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாட 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். முன்னதாக இங்கிலாந்து T20 பிளாஸ்ட் தொடரில் விளையாட ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்து இருந்தார்.
எனினும், கொவிட் – 19 வைரஸ் காரணமாக அந்த தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பையும் அவர் இழந்துள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க