இந்தியாவின் டெஹ்ரதூனில் நடைபெறவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆப்கான் குழாமில் ஷரபுத்தீன் அஷ்ரப் மற்றும் இக்ராம் அலி கைல் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் குழாமில் இருந்து முஜீபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பல புதிய வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சகலதுறை வீரர் அஷ்ரப், 17 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் வக்கார் சலாம்கைல் மற்றும் அலி கைல் ஆகிய வீரர்கள் 14 பேர் கொண்ட டெஸ்ட் குழாமிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
>> மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ள கெயில், ஈவின் லூயிஸ்
பெங்பளூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் டெஸ்ட்டில் இடம்பிடித்த அப்ஸார் சாசாய், அமீர் ஹம்ஸா, முஜீப் உர் ரஹ்மான், சாயித் ஷிர்ஸா மற்றும் சாஹிர் கான் ஆகியோர் வியாழக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை.
ஆப்கான் ஒருநாள் குழாமில் இருந்து அஷ்ரப் வெளியேற்றப்பட்டிருக்கும் அதேவேளை அவர் டி-20 குழாமில் இடம்பிடித்துள்ளார். வளர்ந்து வரும் அணி ஊடாக வந்த அலி கைல் ஒருநாள் மற்றும் டி-20 இரு குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.
2019 உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நேரத்தில் தேர்வாளர்கள் ஆப்கான் ஒருநாள் குழாமில் 21 வீரர்களை இணைத்துள்ளனர்.
எனினும் விக்கெட் காப்பாளரும் அதிரடியாக துடுப்பாடுபவருமான மொஹமட் ஷஹ்ஸாத் டி-20 குழாமில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் அவர் அடுத்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் இடம்பெற்றுள்ளார்.
அஸ்கர் ஆப்கான் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஆப்கான் அணிக்கு தலைமை வகிப்பதோடு மொஹமது நபி மற்றும் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டுக்குமான ஆப்கான் குழாமில் இடம்பெறுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டி-20, ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் டி-20 போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அனைத்துப் போட்டிகளும் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநில தலைநகரான டெஹ்ரதூனில் நடைபெறும்.
இதில் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும். ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட்டில் இந்தியாவிடம் தோற்றதோடு அயர்லாந்து, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.
ஆப்கான் குழாம்
டி-20 – அஸ்கர் ஆப்கான் (தலைவர்), உஸ்மான் கனி, நஜீப் டரகாய், ஹஸ்ரதுல்லா சாசாய், சமியுல்லா சின்வாரி, மொஹமது நபி, ஷபிகுல்லா ஷபாக், ரஷீத் கான், நஜீபுல்லா சத்ரான், கரீம் ஜனட், பரீத் மலிக், சயத் ஷிரர்சாத், சியா உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், சாஹிர் கான், ஷரபுத்தீன் அஷ்ரப்.
ஒருநாள் – அஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், நூர் அலி சத்ரான், ஜாவிட் அஹமதி, ஹஸ்ரதுல்லா சாசாய், ரஹ்மத் ஷாஹ், சமியுல்லா ஷின்வாரி, மொஹமது நபி, நஜீபுல்லா சத்ரான், இக்ராம் அலி கைல், ஹஷ்மதுல்லா ஷஹிதி, ரஷித் கான், கரிம் ஜனத், குல்பதின் நயிபி, அப்தாப் அலம், சவுலத், சாஹிர் கான், பாரித் மாலிக், முஜீப் உர் ரஹ்மான், ஷபூர் சத்ரான், செயித் ஷிர்சாத்.
>> இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு
டெஸ்ட் – அஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், இஹ்ஸாத் ஜனத், ஜாவிட் அஹமதி, ரஹ்மத் ஷாஹ், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷஹிதி, இக்ராம் அலி கைல், மொஹமது நபி, ரஷிட் கான், வபதர் மொமன்ட், யாமின் அஹமட்ஸாய், ஷரபுத்தீன் அஷ்ரப், வக்கார் சலம்கைல்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<