முதன்முறையாக T20 உலகக்கிண்ண அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்!

ICC Men’s T20 World Cup 2024

186

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு சுப்பர் 8 குழு ஒன்றிலிருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

சுப்பர் 8 சுற்றின் தங்களுடைய கடைசி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

முன்னணி வீரர்கள் நீக்கம் ; இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

இந்த வெற்றியுடன் தோல்வியடையாத அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியானது, இந்த இரண்டு அணிகளுடன் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்பின்னர் 12.1 ஓவர்கள் நிறைவில் இந்த வெற்றியிலக்கை அடைந்தால் பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. 

அதேநேரம் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்ததுடன், 12.1 ஓவர்களுக்கு பின்னர் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றால்  அவுஸ்திரேலிய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தது. 

தங்களுடைய அரையிறுதி வாய்ப்புக்காக பங்களாதேஷ் அணி வேகமாக ஓட்டங்களை குவித்த போதும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதுமாத்திரமின்றி தொடர்ந்து இடைக்கிடையில் போட்டியில் மழை குறுக்கிட 19 ஓவர்களில் 114 ஒட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தமையால் அவர்களால் 12.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தனர். அதனை தொடர்ந்து லிடன் டாஸ் ஒரு பக்கத்தில் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் ஆட, ரஷீட் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கு சவால் கொடுத்தார். 

ஒரு கட்டத்தில் 12 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் என்ற நிலையில் பங்களாதேஷ் அணிக்கு 2 விக்கெட்டுகள் கைவசமிருந்தது. இதில் லிடன் டாஸ் 54 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். எனினும் 18வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் நான்காவது பந்தில் டஸ்கின் அஹமட் மற்றும் அடுத்த பந்தில் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 

இளையோர் லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு

இவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்த பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழக்கிழமை (27) தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப்போட்டி வியாழக்கிழமை இரவு இந்தியாஇங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<