ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப்போட்டியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>>இலங்கை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு
மேலும் இந்த வெற்றியுடன் நியூசிலாந்து, T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றின் குழு 2 இல் தாம் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்து பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் T20 உலகக் கிண்ணத்தொடரின் அரையிறுதிப்போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்கின்றது.
அதேநேரம் நியூசிலாந்தின் குழுவில் இருந்து ஏற்கனவே பாகிஸ்தான் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகிய நிலையில், நியூசிலாந்தின் குழுவில் இருந்து அரையிறுதிக்கு தெரிவாகும் வாய்ப்பினைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இந்த T20 உலகக் கிண்ணத்தொடரிலிருந்து சுபர் 12 சுற்றுடன் வெளியேறுகின்றன.
ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் கொண்டதாக அமைந்திருந்த இந்த இரண்டு அணிகளதும் கடைசி குழுநிலைப் போட்டி அபுதாபி நகரில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது வீரர்களுக்காகப் பெற்றார்.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
>>இலங்கை A அணிக்காக அரைச்சதம் அடித்த கமில் மிஷார
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மத்திய வரிசையில் போராட்டம் காட்டியிருந்த நஜீபுல்லா சத்ரான் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார்.
>>இங்கிலாந்தை வீழ்த்தியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாபிரிக்கா
மறுமுனையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக சிறப்பாக செயற்பட்ட அதன் வேகப்பந்துவீச்சாளர்களில் ட்ரென்ட் போல்ட் வெறும் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, டிம் சௌத்தி 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 125 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி குறித்த வெற்றி இலக்கினை 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களுடன் அடைந்தது.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற, டெவோன் கொன்வேய் 32 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
முடிவு – நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<