அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (AFC) 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் தொடரில் பலம்மிக்க சீன அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளம் மங்கையர் 17-0 என்ற கோல்கள் கணக்கில் படுதோல்வியடைந்துள்ளனர்.
கொழும்பு CR&FC மைதானத்தில் கடந்த 15ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இந்த போட்டித் தொடரில் இலங்கை அணி தமது முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், சீன அணி ஒரு வெற்றியுடன் இந்த மோதலில் களமிறங்கியது.
கிருஷாந்தினியின் இரட்டை கோல் வீண்: குவாமிடம் வீழ்ந்தது இலங்கை
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (AFC) 16…
இவ்விரு அணிகளதும் முன்னைய போட்டிகளின் முடிவுகள்
- இலங்கை 2 – 4 குவாம்
- இலங்கை 0 – 7 ஜோர்தான்
- சீனா 20 – 0 குவாம்
ஆட்டம் ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது, உள்வந்த பந்தை சீன வீராங்கனை சாவோ சிகின் கோலுக்குள் செலுத்தி தமக்கான முதல் கோலைப் பெற்றார்.
மீண்டும் 8ஆவது நிமிடத்தில் லன்லன் உள்ளனுப்பிய பந்தை சீனாவின் கொங்கொங் கோலுக்குள் செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களுக்கு சீன அணியினரைத் தடுத்தாடிய இலங்கைக்கு எதிராக, போட்டியின் 15 நிமிடங்கள் கடந்த நிலையில் சீனாவின் யாங் சிகியன் அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
மேலும் இரண்டு நிமிடங்களில் பெனால்டி எல்லைக்குள் பந்தை எடுத்து வந்த லன்லன் இலவாக பந்தை கோலுக்குள் செலுத்தி 4ஆவது கோலைப் பதிவு செய்தார். மீண்டும் 26ஆவது நிமிடத்தில் ஷெயிங் அடுத்த கோலைப் பெற்றார்.
மேலும் 10 நிமிடங்களின் பின்னர் ஹொங்கொங் அடுத்த கோலைப் பெற, சாவோ சிகின் 41ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.
எனினும், சீன வீராங்கனைகள் மேற்கொண்ட சில முயற்சிகளை இலங்கை கோல் காப்பாளர் சங்கலனி பண்டார தடுத்தார்.
Photos: Sri Lanka Vs Jordan – AFC U16 Women’s Championship Qualifiers
Photos Sri Lanka Vs Jordan – AFC U16 Women’s Championship Qualifiers Title…
முதல் பாதியில் மேலதிக நிமிடத்தில் கொங்கொங் மத்திய களத்தில் இருந்து இலங்கை அணியின் பல வீராங்கனைகளைக் கடந்து சென்று கோலுக்கு அண்மையில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்த கோல் எண்ணிக்கை எட்டாக உயர்ந்ததுடன், தனது ஹெட்ரிக் கோலையும் பதிவு செய்தார்.
முதல் பாதி முழுவதும் இலங்கை அணியின் எல்லையிலேயே பந்து முழுமையாக இருந்தது.
முதல் பாதி: இலங்கை 0 – 8 சீனா
முதல் பாதி போன்றே இரண்டாவது பாதியிலும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பந்து நீடித்தது. இலங்கை வீராங்கனைகளின் தடுப்பிற்கு எதிராக சீன அணியினர் இலகுவாக தமது பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் ஜியாங் செங்ஜிங் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று தனது பங்கிற்கும் அணிக்கான கோல் பெறுவதை ஆரம்பித்தார்.
ஜோர்தானிடம் வீழ்ந்த இலங்கைக்கு தொடரில் இரண்டாவது தோல்வி
ஜோர்தான் அணிக்கு இரண்டாவது பாதியில் 5 கோல்களை விட்டுக் கொடுத்த இலங்கை…
தொடர்ந்து மாற்று வீராங்கனையாக களமிறங்கிய ஹிஜாங் மெங்க்யு 64ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற, 69ஆவது நிமிடத்தில் மற்றொரு மாற்று வீராங்கனையான வாங் மின்ஹிஜி தனது முதல் கோலையும் பதிவு செய்தார்.
வாங் கின்லிங் 71ஆவது நிமிடத்தில் சீன அணிக்கான 13ஆவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் இறுதி 15 நிமிடங்களுக்குள் சீன வீராங்கனைகள் மேலும் 4 கோல்களைப் பெற்று, போட்டி நிறைவின்போது தமது கோல் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தினர்.
இதில் 81ஆவது நிமிடத்தில் தனது 3ஆவது கோலைப் பெற்ற சாவோ சிகின், இன்றைய போட்டியில் ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்த இரண்டாவது வீராங்கனையாகப் பதிவானார்.
முழு நேரம்: இலங்கை 0 – 17 சீனா
கோல் பெற்றவர்கள்
சீனா – சாவோ சிகின் 04’, 41’ & 81’, கொங்கொங் 8’, 36’, 45+2’, யாங் சிகியன் 16’ லன்லன் 18’, ஷெயிங் 26’, ஜியாங் செங்ஜிங் 49′, 50′, ஹிஜாங் மெங்க்யு 64′, வாங் மின்ஹிஜி 69′, 76′, வாங் கின்லிங் 71′ ஷீங் ஜியாயு 82′, ஸாவோ சுஜியா 90+3′
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<