ஐ.பி.எல் தொடரில் நோ போல்களைக் கண்காணிக்க தொலைக்காட்சி நடுவர்

162

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த .பி.எல் தொடரில் நடுவர்கள் நோ போல்களை கவனிக்காமல் விட்டு விட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இதனால், 2020 .பி.எல் தொடரில் அந்த மாதிரியான தவறுகள் நடக்காமல் இருக்க நோ போல்களைக் கண்காணிக்க சிறப்பு தொலைக்காட்சி நடுவர் ஒருவரை நியமிக்க .பி.எல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.  

T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையர்களுக்கு குவியும் வாய்ப்புக்கள்

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ………

இதன்படி, தொலைக்காட்சி நடுவர் வேறு, மற்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யும் தொலைக்காட்சி நடுவர்கள் வேறு என்ற முறைமை அடுத்த வருடம் நடைபெறவுள்ள .பி.எல் தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

.பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் நேற்று (05) மும்பையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

முன்னர் நடைபெற்ற .பி.எல் போட்டிகளில் நோ போல்களை கணிப்பதில் நடுவர்கள் செயல்பாடுகள் பல விமர்சனங்களுக்கு ஆளாகின. அதிலும் குறிப்பாக, இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, டோனி ஆகிய இருவருமே .பி.எல் கிரிக்கெட்டில் நோ போல் விவகாரத்தில் தங்கள் எதிர்ப்புகளை களத்திலேயே காட்டிய சம்பவம் கடந்த .பி.எல் போட்டித் தொடரில் நடந்தேறியது.

கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டத்தில் கடைசி பந்தை லசித் மாலிங்க நோ போலாக வீசியது நடுவரால் பார்க்கப்படவில்லை

இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோஹ்லி இதனைமுட்டாள்தனமானதுஎன்று கடுமையாகச் சாடினார். குறித்த ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எனவே, மாலிங்கவின் அந்தப் பந்து நோ போல் என்று ஆகியிருந்தால் ஷிவம் துபே ஒரு ஓட்டத்தை எடுக்க ஏபி. டி வில்லியர்ஸ் ப்ரீ ஹிட்டில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பிருந்தது. காரணம், டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். எனினும், குறித்த பந்தை நடுவர் நோ போலாக அறிவிக்காததால் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது

எனவே, குறித்த விவகாரம் நேற்று நடைபெற்ற .பி.எல் குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இறுதியில், 2020 .பி.எல் கிரிக்கெட்டில் நோ போல்களை கண்காணிக்க தனித்த தொலைக்காட்சி நடுவர் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம், பவர்ப்ளே முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தகுதியான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளியிலிருந்து கொண்டுவர முடியும் என்ற திட்டத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏனெனில், இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள சையத் அலி முஷ்டாக் தொடரில் குறித்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியாத நிலை உள்ளதால், தற்போதைக்கு அந்த முடிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வீரர்கள் ஒதுக்கீடு, வெளிநாட்டு வீரர்களின் பரிமாற்றம் மற்றும் .பி.எல் தொடர் ஆரம்பமாவற்கு முன் வெளிநாட்டு அணிகளுடன் மினி .பி.எல் தொடரில் விளையாடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<