இங்கிலாந்தின் உள்ளூரில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் சவ்தஹம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஹாம்சயர் மற்றும் மிடில்செக்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில்,
மிடில்செக்ஸ் அணியின் தலைவரும் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரருமான எடம் வோக்ஸ்ஸின் பின் தலையில் பந்து பட்டு காயம் அடைந்துள்ளார்.
போட்டியின் முதலில் ஹாம்சயர் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்போது ஒல்லி ரய்னர் என்ற களத்தடுப்பு வீரர் விக்கட் காப்பாளரை நோக்கி எறிந்த பந்து களத்தடுப்பு செய்வதற்கு நின்று கொண்டு இருந்த எடம் வோக்ஸின் தலையில் தாக்கியது. இதன் பின் அங்குள்ள வைத்தியசாலையில் எடம் வோக்ஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனாலும் அவர் தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக மிடில்செக்ஸ் விளையாட்டு கழக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.