ஐசிசி T20 உலகக்கிண்ண தொடரின் நியூசிலாந்து குழாத்திலிருந்து, முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பேர்கஸன் நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லொக்கி பேர்கஸனுக்கு, கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உலகக்கிண்ணத்தின் அனைத்து போட்டிகளிலும் இவரால் விளையாட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
>> அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
லொக்கி பேர்கஸன் கடந்தகாலங்களாக நியூசிலாந்து T20I அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்துவருகின்றார். அத்துடன், இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், சிறந்த முறையில் பந்துவீசியிருந்தார்.
இந்தநிலையில், லொக்கி பேர்கஸனின் இழப்பு, நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், லொக்கி பேர்கஸன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் எடம் மில்ன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் லொக்கி பெர்கஸனுக்கு பதிலாக மாற்றீடு வீரராக எடம் மில்ன் பெயரிடப்பட்டிருந்த போதும், ஐசிசி அனுமதியளித்திருக்கவில்லை. எவ்வாறாயினும், தற்போது, மாற்று வீரருக்கான அனுமதியை ஐசிசி வழங்கயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, லொக்கி பெர்கஸனுக்கு பதிலாக எடம் மில்ன் அணியில் இணைந்துக்கொண்டுள்ளார். இதேவேளை, நியூசிலாந்து அணியானது, தங்களுடைய முதல் சுபர் 12 போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<