Home Tamil இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இலங்கை

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இலங்கை

206

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தினை எதிர்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இந்தப் பருவகாலத்திற்கான இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது…

இவ்வெற்றியோடு இலங்கை இளையோர் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்து கொள்கின்றது. 

கொழும்பு MCA மைதானத்தில் இன்று (8) ஆரம்பமாகியிருந்த குழு B அணிகளுக்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர், கார்த்திக் பழனியப்பன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு வழங்கினார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேபாளத்துடன் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் காணப்பட்டதனால், தமது துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடியது. 

அதன்படி, இலங்கை தரப்புக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த நவோத் பரணவிதான அரைச்சதம் தாண்டி 60 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

இதன் பின்னர் மத்திய வரிசையில் ஆடிய அஹான் விக்ரமசிங்க மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர் நிப்புன் தனன்ஞய ஆகியோர் மிகச் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். 

இலங்கையர்களின் கிரிக்கெட் ஊழல் ஈடுபாடு குறித்து சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான…

இவர்களின் சிறந்த துடுப்பாட்டத்தோடு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

துடுப்பாட்டம் சார்பில், அதிரடியாக ஆடிய அஹான் விக்ரமசிங்க 11 பௌண்டரிகள் அடங்கலாக 53 பந்துகளில் 73 ஓட்டங்களை குவித்திருந்தார். மறுமுனையில் நிப்புன் தனன்ஞய 60 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் றிசாப் முஹர்ஜி 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, அணித்தலைவர் கார்த்திக் பழனியப்பன் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 327 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு ஆன்ஷ் டான்டோன் மற்றும் ஒசாமா ஹஸன் ஆகியோர் வெற்றி இலக்கினை அடைய தமது துடுப்பாட்டம் மூலம் போராட்டத்தை காட்டியிருந்தனர். எனினும், அவர்களது போராட்டம் வீணாக அவ்வணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு 52 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது. 

Photos: Sri Lanka vs UAE – U19 Asia Cup 2019

ஐக்கிய அரபு இராச்சிய இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த, ஆன்ஷ் டான்டோன் சதம் பெற்று 102 பந்துகளில் 100 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேவேளை ஒசாமா ஹஸன் 55 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்த நவோத் பரணவிதான தனது சுழல்பந்துவீச்சு மூலம் 4 விக்கெட்டுக்களை சாய்க்க, அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய மற்றும் ரோஹான் சஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

இந்த தோல்வியினால் ஐக்கிய அரபு இராச்சிய இளம் வீரர்கள் இத்தொடரில் இரண்டாவது தோல்வியினை பெற்றிருப்பதால் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது.  

அதேநேரம், இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி தமது அடுத்த மோதலில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை செவ்வாய்க்கிழமை (10) எதிர்கொள்ளவுள்ளது. 

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் தகுதி

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் 19 வயதின்கீழ்ப்பட்டோருக்கான (இளையோர்)…

இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட நிப்புன் தனன்ஞய பெற்றுக் கொண்டார். 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka U19
326/8 (50)

United Arab Emirates U19
274/9 (50)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Osama Hassan b Muhammad Farazuddin 61 60 9 0 101.67
Kamil Mishara c Vriitya Aravind b Sanchit Sharma 0 1 0 0 0.00
Ravindu De Silva lbw b Akasha Tahir 22 33 1 1 66.67
Ahan Wicrkamasinghe c & b Rishabh Mukherjee 73 52 11 0 140.38
Nipun Dananjaya c Osama Hassan b Palaniapan Meiyappan 60 69 5 0 86.96
Avishka Tharindu c Alishan Sharafu b Rishabh Mukherjee 13 15 2 0 86.67
Chamindu Wijesinghe c Palaniapan Meiyappan b Rishabh Mukherjee 27 27 1 1 100.00
Rohan Sanjaya c Ansh Tandon b Palaniapan Meiyappan 36 31 2 1 116.13
Ashian Daniel not out 16 8 2 0 200.00
Amshi De Silva not out 7 5 0 0 140.00


Extras 11 (b 1 , lb 0 , nb 1, w 9, pen 0)
Total 326/8 (50 Overs, RR: 6.52)
Fall of Wickets 1-2 (1.1) Kamil Mishara, 2-46 (9.3) Ravindu De Silva, 3-159 (23.5) Ahan Wicrkamasinghe, 4-161 (24.2) Navod Paranavithana, 5-176 (27.2) Avishka Tharindu, 6-224 (36.5) Chamindu Wijesinghe, 7-299 (47.3) Nipun Dananjaya, 8-301 (47.5) Rohan Sanjaya,

Bowling O M R W Econ
Akasha Tahir 6 0 43 1 7.17
Sanchit Sharma 8 0 52 1 6.50
Alishan Sharafu 7 0 41 0 5.86
Muhammad Farazuddin 9 0 54 1 6.00
Palaniapan Meiyappan 10 0 70 2 7.00
Rishabh Mukherjee 10 0 65 3 6.50


Batsmen R B 4s 6s SR
Syed Haider c Ahan Wicrkamasinghe b Rohan Sanjaya 27 50 4 0 54.00
Niel Lobo lbw b Chamindu Wijesinghe 4 21 0 0 19.05
Vriitya Aravind c Kamil Mishara b Rohan Sanjaya 26 32 2 2 81.25
Ansh Tandon not out 100 102 8 1 98.04
Alishan Sharafu c Avishka Tharindu b Navod Paranavithana 36 27 4 2 133.33
Osama Hassan c Chamindu Wijesinghe b Nipun Dananjaya 55 46 8 2 119.57
Sanchit Sharma c Chamindu Wijesinghe b Navod Paranavithana 4 8 0 0 50.00
Muhammad Farazuddin c & b Navod Paranavithana 0 1 0 0 0.00
Palaniapan Meiyappan b Navod Paranavithana 4 7 0 0 57.14
Akasha Tahir b Nipun Dananjaya 7 11 1 0 63.64


Extras 11 (b 0 , lb 2 , nb 5, w 4, pen 0)
Total 274/9 (50 Overs, RR: 5.48)
Fall of Wickets 1-22 (7.2) Niel Lobo, 2-60 (14.6) Syed Haider, 3-61 (16.5) Vriitya Aravind, 4-105 (24.6) Alishan Sharafu, 5-226 (41.5) Osama Hassan, 6-240 (44.2) Sanchit Sharma, 7-241 (44.4) Muhammad Farazuddin, 8-255 (46.6) Palaniapan Meiyappan, 9-274 (49.6) Akasha Tahir,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 8 1 29 0 3.62
Amshi De Silva 6 0 30 0 5.00
Chamindu Wijesinghe 5 0 36 1 7.20
Ashian Daniel 8 0 46 0 5.75
Rohan Sanjaya 8 1 36 2 4.50
Navod Paranavithana 8 0 54 4 6.75
Nipun Dananjaya 7 0 41 2 5.86



முடிவு – இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றி 


பங்களாதேஷ் எதிர் நேபாளம்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற குழு B அணிகளின் ஏனைய மோதலில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி, நேபாள 19 வயதுக்குட்பட்ட அணியினை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருந்தது. 

மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் தம்முடைய இரண்டாவது வெற்றியினை பதிவு செய்த பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது. 

போட்டியின் சுருக்கம்

நேபாளம் – 261/8 (50) பவன் சர்ரப் 81, சுந்தீப் ஜோரா 56, தன்ஷிம் ஹஸன் சாகிப் 51/2, சஹீன் ஆலாம் 58/2

பங்களாதேஷ் – 262/4 (49.2) அக்பர் அலி 98*, தௌஹீத் ரித்தோய் 60, சமிம் ஹொஸ்ஸைன் 40*, கமல் சிங்க் 59/2

முடிவு – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<