கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை A அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பங்களாதேஷ் A அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் A அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை A அணிக்கு வழங்கியது. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டமொன்றை பெற்றுக்கொடுத்தனர்.
>>ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் டிராவிஷ் ஹெட்
வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட குரூஸ்புள்ளே 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அவிஷ்க பெர்னாண்டோ பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுக இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், இருவரும் அரைச்சதங்களையும் கடந்தனர்.
சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்த நிலையில் மினோத் பானுக 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர் பசிந்து சூரியபண்டார வேகமாக 32 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற, மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ தன்னுடைய 9வது லிஸ்ட் A சதத்தை பதிவுசெய்தார்.
அவிஷ்க பெர்னாண்டோ 124 பந்துகளுக்கு 133 ஓட்டங்களை பெற்று ஆட்டடமிழக்க அடுத்து களமிறங்கிய அஷேன் பண்டார 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் துனித் வெல்லாலகே 31 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சௌமிய சர்கார் மற்றும் ரிபோன் மொண்டல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் A அணிக்கு நயிம் ஷேக் மற்றும் டன்ஷிட் ஹஸன் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். ஆரம்பம் முதல் வேகமாக இவர்கள் துடுப்பெடுத்தாடியதுடன், முதல் விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த நிலையில் சஹான் ஆராச்சிகே நயிம் ஷேக்கின் விக்கெட்டினை கைப்பற்றினார். மறுமுனையில் வேகமாக ஆடி 39 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு சவால் கொடுத்த டன்ஷிட் ஹஸனின் விக்கெட்டினை சாமிக்க கருணாரத்ன கைப்பற்ற அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும் பங்களாதேஷ் A அணித்தலைவர் மொஹமட் சயீப் ஹஸன் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மீண்டும் தடுமாற்றத்தை கொடுத்தார். வேகமாக இவர் ஆடியதுடன், ஷகிர் ஹஸன் நிதானமாக ஆடி இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினர்.
>>WATCH – உலகக்கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை தீர்க்கவேண்டிய சிக்கல்கள் என்ன? | Cricket Kalam
இவர்களின் இணைப்பாட்டம் ஒரு கட்டத்தில் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்த போதும், சஹான் ஆராச்சிகே தன்னுடைய 2வது விக்கெட்டாக ஷகிர் ஹஸனை (26 ஓட்டங்கள்) வெளியேற்றினார். இந்த ஆட்டமிழப்பின் பின்னர் பந்துவீச அழைக்கப்பட்ட துஷான் ஹேமந்த அச்சுறுத்தலை கொடுத்த சயீப் ஹஸனை 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச்செய்ததுடன், அதனைத்தொடர்ந்து மேலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் பங்ளாதேஷ் அணி 191 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
சயீப் ஹஸனின் ஆட்டமிழப்பை தொடர்ந்து சௌமிய சர்கார் 42 ஓட்டங்கள், ரகிபுல் ஹஸன் 40 ஓட்டங்கள் மற்றும் மெஹிதி ஹாஸன் 31 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்காக போராடிய போதும், விக்கெட்டுகள் கைவசம் இல்லாத காரணத்தால் பங்களாதேஷ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியவில்லை.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்த, பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் 301 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | b Soumya Sarkar | 133 | 124 | 13 | 3 | 107.26 |
Lasith Croospulle | c Mohammad Naim b Mahedi Hasan | 31 | 28 | 6 | 1 | 110.71 |
Minod Bhanuka | c Mahedi Hasan b Ripon Mondol | 57 | 55 | 4 | 3 | 103.64 |
Sahan Arachchige | c Akbar Ali b Ripon Mondol | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Pasindu Sooriyabandara | c Tanzim Hasan b Rakibul Hasan | 43 | 32 | 4 | 2 | 134.38 |
Ashen Bandara | c Zakir Hasan b Soumya Sarkar | 35 | 25 | 4 | 0 | 140.00 |
Dunith Wellalage | c Ripon Mondol b Soumya Sarkar | 31 | 19 | 3 | 1 | 163.16 |
Chamika Karunarathne | c Akbar Ali b Ripon Mondol | 8 | 5 | 1 | 0 | 160.00 |
Dushan Hemantha | not out | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Pramod Madushan | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 0 , lb 2 , nb 1, w 3, pen 0) |
Total | 349/8 (50 Overs, RR: 6.98) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ripon Mondol | 10 | 0 | 71 | 3 | 7.10 | |
Musfik Hasan | 9 | 0 | 68 | 0 | 7.56 | |
Soumya Sarkar | 5 | 0 | 52 | 3 | 10.40 | |
Rakibul Hasan | 10 | 0 | 63 | 1 | 6.30 | |
Mahedi Hasan | 10 | 0 | 48 | 1 | 4.80 | |
Saif Hassan | 4 | 0 | 29 | 0 | 7.25 | |
Mahmudul Hasan Joy | 2 | 0 | 16 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tanzim Hasan | st Minod Bhanuka b Sahan Arachchige | 22 | 25 | 1 | 2 | 88.00 |
Mohammad Naim | c Minod Bhanuka b Chamika Karunarathne | 51 | 39 | 11 | 0 | 130.77 |
Zakir Hasan | c Lasith Croospulle b Sahan Arachchige | 23 | 20 | 3 | 0 | 115.00 |
Saif Hassan | c Lasith Croospulle b Dushan Hemantha | 56 | 50 | 4 | 3 | 112.00 |
Mahmudul Hasan Joy | c Avishka Fernando b Dushan Hemantha | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Soumya Sarkar | c Pasindu Sooriyabandara b Pramod Madushan | 42 | 46 | 6 | 0 | 91.30 |
Akbar Ali | lbw b Dushan Hemantha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Mahedi Hasan | c Minod Bhanuka b Dunith Wellalage | 31 | 30 | 3 | 2 | 103.33 |
Rakibul Hasan | c Pasindu Sooriyabandara b Pramod Madushan | 40 | 36 | 3 | 2 | 111.11 |
Ripon Mondol | not out | 16 | 24 | 1 | 0 | 66.67 |
Musfik Hasan | c Sahan Arachchige b Pramod Madushan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 2, w 3, pen 0) |
Total | 301/10 (48.3 Overs, RR: 6.21) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Pramod Madushan | 6.3 | 0 | 50 | 3 | 7.94 | |
Sahan Arachchige | 10 | 0 | 62 | 2 | 6.20 | |
Chamika Karunarathne | 8 | 0 | 60 | 1 | 7.50 | |
Dunith Wellalage | 8 | 0 | 41 | 1 | 5.12 | |
Dushan Hemantha | 10 | 0 | 54 | 3 | 5.40 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<