ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசியக்கிண்ணத் தொடரின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை A அணி தோல்வியடைந்தது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை A அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
>>அவிஷ்கவின் அபார சதத்துடன் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி
ஆப்கானிஸ்தான் A அணியின் முதல் விக்கெட்டை ஒரு ஓட்டத்துக்கு கைப்பற்றி இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ரியாஸ் ஹஸன் மற்றும் நூர் அலி ஷர்தான் ஆகியோர் 99 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
இதில் அரைச்சதம் கடந்த நூர் அலி ஷர்தான் 53 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், மறுபக்கம் ரியாஸ் ஹஸன் அரைச்சதம் கடந்து துடுப்பெடுத்தாடினார். அதன்படி ரியாஸ் ஹஸன் 82 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, இக்ரம் அலிகில் (32 ஓட்டங்கள்) மற்றும் சயிதுல்லாஹ் கமல் (23 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பங்களித்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், துஷான் ஹேமந்த மற்றும் லஹிரு சமரகோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 252/9 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை சந்தித்தது. முதல் போட்டியில் சதமடித்த அவிஷ்க பெர்னாண்டோவுடன், லசித் குரூஸ்புள்ளே, பசிந்து சூரியபண்டார மற்றும் சாஹன் ஆராச்சிகே ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
மொஹமட் இப்ராஹிமின் பந்துவீச்சுக்கு முழுமையாக தடுமாறியதன் மூலம் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு அஷேன் பண்டார மற்றும் மினோத் பானுக இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இவர்கள் இருவரும் 35 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அஷேன் பண்டார (19) துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார்.
>>WATCH – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி? | Sports RoundUp – Epi 237
இதனையடுத்து துனித் வெல்லாலகே களமிறங்கி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் 21 ஓட்டங்களுடன் வெளியேற, சாமிக்க கருணாரத்ன வந்தவேகத்தில் (2 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார். எனவே இலங்கை அணி 102 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து முழுமையான பின்னடைவை சந்தித்தது.
எனினும் 8வது விக்கெட்டுக்காக இணைந்த துஷான் ஹேமந்த மற்றும் மினோத் பானுக ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்தனர். இதில் அரைச்சதம் கடந்து ஆடிய மினோத் பானுக தன்னுடைய 3வது லிஸ்ட் ஏ சதத்தை பதிவுசெய்து இலங்கை அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்செல்ல துஷான் ஹேமந்த பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
துரதிஷ்டவசமாக துஷான் ஹேமந்த 31 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 53 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மீண்டும் சிறந்த இணைப்பாட்டத்தை மினோத் பானுக, லஹிரு சமரகோன் ஆகியோர் பதிவுசெய்தாலும், 24 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மினோத் பானுக ஆட்டமிழந்தார்.
மினோத் பானுக ஒரு சிக்ஸர் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், 24 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் லஹிரு சமரகோன் 2 சிக்ஸர்களை விளாசினார். இலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 12 ஆக குறைந்திருக்கும் போது மீண்டுமொரு சிக்ஸரை விளாச எத்தணித்து லஹிரு சமரகோன் ஆட்டமிழக்க, 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
>>இலங்கை – பாகிஸ்தான் தொடரை பார்வையிட இலவச அனுமதி
இலங்கை அணி தங்களுடைய முழுமையான 50 ஓவர்களை விளையாட தவறியதுடன், 38.5 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பந்துவீச்சில் மொஹமட் இப்ராஹிம் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சலீம் மற்றும் ரஹ்மான் அக்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றிபெறவேண்டும். அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றால், ஓட்ட சராசரியின் அடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zubaid Akbari | c Pasindu Sooriyabandara b Lahiru Samarakoon | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Riaz Hassan | c & b Chamika Karunarathne | 82 | 104 | 11 | 0 | 78.85 |
Noor Ali Zadran | c Minod Bhanuka b Dushan Hemantha | 53 | 62 | 5 | 1 | 85.48 |
Shahidullah | b Chamika Karunarathne | 23 | 32 | 1 | 0 | 71.88 |
Bahir Shah | c Nuwanidu Fernando b Avishka Fernando | 15 | 15 | 0 | 1 | 100.00 |
Ikram Alikhil | not out | 34 | 44 | 0 | 0 | 77.27 |
Sharafuddin Ashraf | c & b Dunith Wellalage | 19 | 27 | 2 | 0 | 70.37 |
Zia ur Rehman | c Minod Bhanuka b Dunith Wellalage | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Mohammad Ibrahim | c & b Chamika Karunarathne | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Mohammad Saleem | c Ashen Bandara b Binura Fernando | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Extras | 14 (b 1 , lb 1 , nb 2, w 10, pen 0) |
Total | 252/9 (50 Overs, RR: 5.04) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 8 | 0 | 35 | 1 | 4.38 | |
Lahiru Samarakoon | 7 | 2 | 25 | 2 | 3.57 | |
Dunith Wellalage | 10 | 0 | 47 | 1 | 4.70 | |
Chamika Karunarathne | 8 | 0 | 56 | 3 | 7.00 | |
Dushan Hemantha | 10 | 0 | 54 | 2 | 5.40 | |
Sahan Arachchige | 7 | 0 | 33 | 0 | 4.71 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | lbw b Mohammad Ibrahim | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Lasith Croospulle | b Mohammad Ibrahim | 7 | 7 | 1 | 0 | 100.00 |
Minod Bhanuka | c Bahir Shah b Mohammad Saleem | 119 | 103 | 17 | 1 | 115.53 |
Pasindu Sooriyabandara | lbw b Mohammad Ibrahim | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Sahan Arachchige | c Bahir Shah b Mohammad Ibrahim | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Ashen Bandara | run out (Ikram Alikhil) | 19 | 23 | 4 | 0 | 82.61 |
Dunith Wellalage | c Ikram Alikhil b Mohammad Saleem | 21 | 18 | 3 | 1 | 116.67 |
Chamika Karunarathne | lbw b Zia ur Rehman | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Dushan Hemantha | c Zubaid Akbari b Sharafuddin Ashraf | 31 | 53 | 3 | 0 | 58.49 |
Lahiru Samarakoon | c Mohammad Saleem b Zia ur Rehman | 16 | 14 | 0 | 2 | 114.29 |
Binura Fernando | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 23 (b 0 , lb 2 , nb 3, w 18, pen 0) |
Total | 241/10 (38.5 Overs, RR: 6.21) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Ibrahim | 8 | 0 | 52 | 4 | 6.50 | |
Bilal Sami | 4 | 0 | 30 | 0 | 7.50 | |
Mohammad Saleem | 8 | 0 | 47 | 2 | 5.88 | |
Zia ur Rehman | 7.5 | 1 | 44 | 2 | 5.87 | |
Riaz Hassan | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Sharafuddin Ashraf | 8 | 0 | 47 | 1 | 5.88 | |
Zubaid Akbari | 2 | 0 | 11 | 0 | 5.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<