இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக கொக்ஸ் பசாரில் நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைனின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணி 90 ஓட்டங்களினால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளையீட்டிய பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதுடன், அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
ஓமானிடம் தோல்வியடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் வளர்ந்து…..
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.
இதில் A குழுவில் இடம்பெற்றுள்ள நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி, நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஓமானிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இன்று (16) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஒமைர் யூசுப், ஹைதர் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஒமைர் யூசுப் 10 ஓட்டங்களுடனும், ஹைதர் அலி 15 ஓட்டங்களுடனும் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணித் தலைவர் சௌத் ஷகீல் ஒரு ஓட்டத்டன் வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களை எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், மத்திய வரிசையில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் காப்பாளர் ரொஹைல் நசீர் 37 ஓட்டங்களையும், குஷ்தில் ஷாஹ் 32 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்க, அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய அமாத் பட் 44 ஓட்டங்களை எடுத்து (3 சிக்ஸர்கள், 3 பௌவுண்டரிகள்) ரன்-அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை வனர்ந்துவரும் அணி சார்பில் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும், அமில அபோன்சோ, கலன பெரேரா தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் 184 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வளர்ந்துவரும் அணியின் பெதும் நிஸ்ஸங்க, மினோத் பாணுக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இலங்கை அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 15 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மினோத் பாணுக (2) மொஹமட் ஹஸ்னைனின் பந்து வீச்சில், அமாத் பட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இவரது ஆட்டமிழப்புக்கு பின்னர் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த ஹசித போயகொட நிதானமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டு இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
எனினும், குஷ்தில் ஷாஹ்வின் பந்துவீச்சில் ஹசித போயகொட (22), முஹம்மத் அஸாதிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அணி வெகுவாக தடுமாறியது. அணித் தலைவர் சரித் அசலங்க (9 ஓட்டங்கள்), அஷேன் பண்டார (0), கமிந்து மெண்டிஸ் (19 ஓட்டங்கள்) என வரிசையாக நடையைக் கட்டினர்.
தொடர்ந்து மத்திய வரிசையிலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு திணறிய இலங்கை அணி, 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இதில் அஷேன் பண்டார, ஜெஹான் டேனியல் மற்றும் அமில அபோன்சோ டக்-அவுட் முறையிலும், ரமேஷ் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடனும் மொஹமட் ஹஸ்னைனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், 30.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை வளர்ந்துவரும் அணி 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தது.
பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய 19 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைன் 7 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
எனவே, 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணி, இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள, அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்த இலங்கை அணி இன்னுமொரு போட்டி எஞ்சியிருக்க அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள்
சுமார் 10 வருட காலத்திற்குப் பின்னர்…..
முன்னதாக பாகிஸ்தான் அணி தமது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை வளர்ந்துவரும் அணி தமது கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணியை நாளை மறுதினம் (18) சந்திக்கவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Omair Yousuf | c Minod Bhanuka b Asitha Fernando | 10 | 22 | 1 | 0 | 45.45 |
Haider Ali | c Jehan Daniel b Asitha Fernando | 15 | 20 | 2 | 0 | 75.00 |
Rohail Nazir | b Amila Aponso | 37 | 47 | 2 | 0 | 78.72 |
Saud Shakeel | c Minod Bhanuka b Kalana Perera | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Saif Badar | b Jehan Daniel | 16 | 49 | 0 | 0 | 32.65 |
Umer Khan | c Amila Aponso b Kalana Perera | 10 | 37 | 0 | 0 | 27.03 |
Khushdil Shah | c Ashen Bandara b Amila Aponso | 32 | 47 | 2 | 2 | 68.09 |
Amad Butt | run out (Minod Bhanuka) | 44 | 45 | 3 | 3 | 97.78 |
Sameen Gul | b Ramesh Mendis | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Mohammad Hasnain | b Asitha Fernando | 6 | 13 | 1 | 0 | 46.15 |
Muhammad Asad | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 10 (b 2 , lb 1 , nb 0, w 7, pen 0) |
Total | 183/10 (49.5 Overs, RR: 3.67) |
Fall of Wickets | 1-25 (6.2) Omair Yousuf, 2-28 (8.2) Haider Ali, 3-31 (9.3) Saud Shakeel, 4-80 (23.1) Rohail Nazir, 5-82 (24.1) Saif Badar, 6-114 (34.3) Umer Khan, 7-142 (41.1) Khushdil Shah, 8-155 (44.6) Sameen Gul, 9-181 (48.6) Amad Butt, 10-183 (49.5) Mohammad Hasnain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 9.5 | 1 | 28 | 3 | 2.95 | |
Kalana Perera | 10 | 0 | 45 | 2 | 4.50 | |
Jehan Daniel | 10 | 0 | 33 | 1 | 3.30 | |
Amila Aponso | 10 | 1 | 36 | 2 | 3.60 | |
Ramesh Mendis | 10 | 1 | 38 | 1 | 3.80 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Amad Butt b Khushdil Shah | 34 | 56 | 4 | 0 | 60.71 |
Minod Bhanuka | c & b Mohammad Hasnain | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Hasitha Boyagoda | c Muhammad Asad b Khushdil Shah | 22 | 42 | 3 | 0 | 52.38 |
Charith Asalanka | c Rohail Nazir b Mohammad Hasnain | 9 | 25 | 0 | 0 | 36.00 |
Kamindu Mendis | c & b Umer Khan | 19 | 38 | 1 | 1 | 50.00 |
Ashen Bandara | lbw b Mohammad Hasnain | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ramesh Mendis | b Mohammad Hasnain | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Jehan Daniel | b Mohammad Hasnain | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kalana Perera | c Omair Yousuf b Umer Khan | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Amila Aponso | b Mohammad Hasnain | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 0 , lb 2 , nb 2, w 1, pen 0) |
Total | 93/10 (30.4 Overs, RR: 3.03) |
Fall of Wickets | 1-15 (5.3) Minod Bhanuka, 2-60 (18.2) Hasitha Boyagoda, 3-61 (18.5) Pathum Nissanka, 4-89 (27.5) Charith Asalanka, 5-89 (27.6) Ashen Bandara, 6-91 (28.6) Kamindu Mendis, 7-92 (29.3) Jehan Daniel, 8-93 (29.5) Ramesh Mendis, 9-93 (29.6) Amila Aponso, 10-93 (30.4) Kalana Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sameen Gul | 7 | 1 | 27 | 0 | 3.86 | |
Umer Khan | 3.4 | 0 | 4 | 2 | 1.18 | |
Mohammad Hasnain | 7 | 1 | 19 | 6 | 2.71 | |
Amad Butt | 3 | 0 | 17 | 0 | 5.67 | |
Muhammad Asad | 3 | 0 | 10 | 0 | 3.33 | |
Khushdil Shah | 7 | 1 | 14 | 2 | 2.00 |
முடிவு – பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணி 90 ஓட்டங்களினால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<