Home Tamil சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை

சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை

194
ACC

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (18) நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் சகலதுறையிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதன்மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளை சந்தித்த நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

மொஹமட் ஹஸ்னைனின் வேகத்தால் இலங்கையை பந்தாடியது பாகிஸ்தான்

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக………..

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.

இதில் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி, முதல் லீக் ஆட்டத்தில் ஓமானிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 94 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இன்று (18) கொக்ஸ் பசாரில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பெதும் நிஸ்ஸங்க முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹசித போயகொட 8 ஓட்டங்களுடன் வெளியேற, முதலிரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய மினோத் பானுக்க 42 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.

T20 தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான்……………

4ஆவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கமிந்து மெண்டிஸ் 71 பந்தில் 63 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் சரித் அசலங்க 106 பந்துகளில் 100 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்

எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுக்க 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 238 ஓட்டங்களை எடுத்தது

பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 5 ஓட்டங்களுக்கு 7 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி, இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.

பந்துவீச்சில் அஸ்மதுல்லாஹ் ஒமர்சாய் மற்றும் அப்துல் வாஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யூசுப் ஷசாய் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 239 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்துல் மலிக் மற்றும் சஹிதுல்லாஹ் ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது அப்துல் மலிக் 47 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஹீர் ஷா 10 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

அதன்பின்னர் சஹிதுல்லாஹ்வுடன் ஜோடி சேர்ந்த டர்விஷ் ரசூலி மூன்றாவது விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய சஹிதுல்லாஹ் 102 ஓட்டங்களையும், டர்விஷ் ரசூலி 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

இறுதியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டதுடன், அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கலன பெரேரா, சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka Emerging Team
238/10 (49.5)

Afghanistan Emerging
242/3 (44.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tariq Stanikzai b Yousuf Zazai 0 1 0 0 0.00
Minod Bhanuka c Munir Ahmad b Shahidullah 42 60 0 0 70.00
Hasitha Boyagoda c Munir Ahmad b Azmatullah Omarzai 8 18 0 0 44.44
Charith Asalanka c Munir Ahmad b Azmatullah Omarzai 100 106 6 3 94.34
Kamindu Mendis st Munir Ahmad b Abdul Wasi 63 71 6 1 88.73
Ashen Bandara c Azmatullah Omarzai b Abdul Wasi 1 2 0 0 50.00
Sammu Ashan lbw b Abdul Wasi 1 4 0 0 25.00
Chamika Karunarathne b Tariq Stanikzai 5 15 0 0 33.33
Kalana Perera b Azmatullah Omarzai 9 15 0 0 60.00
Amila Aponso b Yousuf Zazai 0 3 0 0 0.00
Asitha Fernando not out 1 4 0 0 25.00


Extras 8 (b 1 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 238/10 (49.5 Overs, RR: 4.78)
Fall of Wickets 1-0 (0.1) Pathum Nissanka, 2-25 (7.6) Hasitha Boyagoda, 3-87 (18.4) Minod Bhanuka, 4-202 (39.3) Kamindu Mendis, 5-204 (39.6) Ashen Bandara, 6-208 (41.3) Sammu Ashan, 7-215 (44.2) Chamika Karunarathne, 8-233 (47.4) Charith Asalanka, 9-234 (48.3) Amila Aponso, 10-238 (49.5) Kalana Perera,

Bowling O M R W Econ
Yousuf Zazai 9 2 26 2 2.89
Azmatullah Omarzai 9.5 0 36 3 3.79
Abdul Malik 2 0 19 0 9.50
Shahidullah 6 0 38 1 6.33
Abdul Wasi 10 0 50 3 5.00
Tariq Stanikzai 6 0 30 1 5.00
Samiullah Shinwari 7 0 37 0 5.29


Batsmen R B 4s 6s SR
Abdul Malik run out (Amila Aponso) 47 54 6 1 87.04
Shahidullah not out 102 137 7 3 74.45
Bahir Shah c Minod Bhanuka b Charith Asalanka 10 18 1 0 55.56
Darwish Rasooli c Kamindu Mendis b Kalana Perera 61 59 2 5 103.39
Samiullah Shinwari not out 7 3 0 1 233.33


Extras 15 (b 0 , lb 5 , nb 3, w 7, pen 0)
Total 242/3 (44.5 Overs, RR: 5.4)
Fall of Wickets 1-99 (18.3) Abdul Malik, 2-114 (23.5) Bahir Shah, 3-233 (43.4) Darwish Rasooli,

Bowling O M R W Econ
Asitha Fernando 4 0 33 0 8.25
Kalana Perera 6 1 30 1 5.00
Amila Aponso 10 0 33 0 3.30
Chamika Karunarathne 6 0 32 0 5.33
Charith Asalanka 8 0 34 1 4.25
Kamindu Mendis 4 0 24 0 6.00
Ashen Bandara 3.5 0 22 0 6.29
Sammu Ashan 3 0 29 0 9.67



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<